Rajini - உங்க புருஷன் கொடுத்து வெச்சவருங்க.. குஷ்பூவிடம் அப்படி பேசிய ரஜினிகாந்த்?.. என்ன தலைவரே இதெல்லாம்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) குஷ்பூவிடம் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவிவருகிறது.
சூப்பர் ஸ்டார் நாற்காலியில் பல வருடங்களாக அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுதான் அவர் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அவரது நடை, உடை, ஸ்டைல், டயலாக் டெலிவரி என அத்தனையுமே தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிதாக இருந்தது. அதனாலேயே அவரை ரசிகர்களும், இயக்குநர்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.

நன்றி மறவாமை: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தான் வந்த வழியையும் பட்ட வலியையும் மறக்காதவர். அதிலும் தன்னை வைத்து படம் இயக்கியவர்களுக்கு ரொம்ப ரொம்ப மரியாதை கொடுப்பவர். அவரை அறிமுகப்படுத்திய பாலசந்தர் தொலைபேசி வாயிலாக ரஜினியிடம் பேசினாலும் ரஜினிகாந்த் எழுந்து நின்றுதான் பேசுவார் என்ற தகவல் பல வருடங்களாக கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
யாராக இருந்தாலும் மரியாதைதான்: பாலசந்தர் மற்றும் மூத்த இயக்குநர்கள் என்று மட்டுமில்லை கடைசியாக அவரை வைத்து படம் இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கும்கூட இதே மரியாதையைத்தான் கொடுத்திருக்கிறார். அதாவது நெல்சனை பார்த்தால் உடனே ரஜினி எழுந்து நின்றிருக்கிறார். அதனை நெல்சன் திலீப்குமாரும் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளம் இயக்குநருக்கும் ரஜினிகாந்த் இப்படிப்பட்ட மரியாதை கொடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் பாடத்தையும் கொடுத்தது.
சர்ச்சைகள்: இப்படி ரஜினியை சுற்றி ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருந்தாலும் சர்ச்சைகளும் சுற்றத்தான் செய்திருக்கின்றன. இப்போது அவர் ரொம்பவே சாந்தமாக மாறிவிட்டார். ஆனால் தன்னுடைய இள வயதில் அவர் மாதிரி ஒரு கோபக்காரர் இருந்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். விமான நிலையத்தில் சண்டை போட்டது, தன்னுடைய திருமணத்துக்கு தனது அனுமதி இல்லாமல் வந்தால் உதைப்பேன் என பத்திரிகையாளர்களிடம் பொங்கியது என்று அவரது கோபத்துக்கு சான்றாக பல விஷயங்கள் இருக்கின்றன.
ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது: குறிப்பாக ஜெயலலிதாவை பார்த்து பலரும் பம்மிக்கொண்டிருந்த நேரத்தில் ரஜினிகாந்த் தைரியமாக அவருக்கு எதிராக குரல் எழுப்பினார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது என்று ஒரு மேடையில் பேசியது 90களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக தனக்கு எதிராக பேசியவரை ஒரு வழி ஆக்கிவிடும் ஜெயலலிதாவால்கூட ரஜினிகாந்த்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு ரஜினிக்கு ரசிகர்களின் பலம் இருந்தது.
அரசியல் பிரச்னை: ரஜினியின் வாழ்க்கையிலேயே அவர் சந்தித்த மிகப்பெரிய விமர்சனங்களில் ஒன்று அவர் அரசியல் கட்சி தொடங்காததுதான். சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று பேசிய அவர் திடீரென அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். இதனால் அவர் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றிவிட்டார் என்ற சர்ச்சையும் உருவானது. ஆனால் ரஜினிகாந்த் வழக்கம்போல் அமைதி காத்தார்.
அப்படி பேசிய ரஜினிகாந்த்?: இந்நிலையில் குஷ்பூவிடம் ரஜினிகாந்த் ஒரு விஷயம் பேசியதாக தகவல் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. அதாவது அண்ணாமலை படத்தில் ரஜினி - குஷ்பூ ஜோடியாக நடித்திருப்பார்கள். அதில் இருவருக்குமே வயதான கெட்டப்பும் இருக்கும். ஒருமுறை அந்த கெட்டப்பை போட்டுக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாராம் குஷ்பூ.
அவரை ரஜினிகாந்த் விடாமல் பார்த்துக்கொண்டே இருந்தாராம். ஒருகட்டத்தில் அதை கவனித்த குஷ்பூ; எதற்காக சார் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு ரஜினியோ, 'உங்களை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் கொடுத்து வெச்சவர். ஏனெனில் இந்த வயதான கெட்டப்பில்கூட ரொம்பவே அழகாக இ ருக்கிறீர்கள்' என்றாராம். இந்தத் தகவல்தான் வேகமாக பரவிவருகிறது. ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு படமான லால் சலாம் விரைவில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











