சிவகார்த்திகேயனுக்கு செம பல்பு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. தலைவர் வேற ரகம்தான் போங்க
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் உலகளவில் புகழடைந்த இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட விருதுகளை பெற்று புகழடைந்த அவர் ஏராளமான தேசிய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். அவரது இசையமைப்பில் கடைசியாக ஆடு ஜீவிதம், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வந்தன. அடுத்ததாக காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனிடம் அவர் உரையாடிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ரோஜா படத்தில் இசையமைக்க ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான் முப்பது வருடங்களை கடந்தும் தனது சிறந்த இசையை கொடுத்துவருகிறார். அவர் இசையமைத்தாலே அந்தப் படம் பெரிய விளம்பரத்தை தேடிக்கொள்ளும் என்ற நிலைதான் இன்றுவரை இருக்கிறது. எந்த ஜானரிலும் தனது சிறந்த இசையை கொடுக்கக்கூடிய அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவரை நேரில் பார்த்துவிடமாட்டோமா என்றும் ஏங்கி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆஸ்கர் தமிழன்: இந்திய அளவில் மட்டும் புகழடைந்திருந்த அவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்து ஆஸ்கர் விருதுகளை வென்று உலகளவில் புகழடைந்தார். அந்த விருதுகள் மட்டுமின்றி கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட உலகளவில் புகழடைந்த விருதுகளையும் அவர் வென்றிருக்கிறார். அதேபோல் ஏராளமான தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என அவர் வாங்கி குவிக்காத விருதுகளே இல்லை. கடைசியாக அவரது இசையமைப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம்கூட ஆஸ்கர் ரேஸில் நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனைவியுடன் பிரிவு: அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ; அதேபோல் அவரது குணத்துக்கும் பேச்சுக்கும்கூட அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக மிஸ்டர் க்ளீன் என்ற இமேஜுடைய திரைத்துறை பிரபலங்களில் அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் சைரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அண்மையில் அவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?: ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியை பிரிந்ததற்கு பலரும் வழக்கம் போல் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரஹ்மானும், தானும் பிரிவதாகவும்; அவரை போல் ஒரு நல்ல மனிதரை காணவே முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சைரா பானு. ரஹ்மானின் இசையமைப்பில் அடுத்ததாக காதலிக்க நேரமில்லை படம் வெளியாகிறது. அதிலிருந்து வெளியான இரண்டு பாடல்களில் இழு இழு இழுக்குதடி பாடல் பயங்கர ஹிட்டாகியிருக்கிறது.
தக் லைஃப் ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் தான் பேசும் வார்த்தைகளில் தக் லைஃப் கொடுக்கக்கூடியவர். அப்படி அவர் சிவகார்த்திகேயனுக்கு தக் லைஃப் கொடுத்தது ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவர் ஆஸ்கர் வென்ற சமயத்தில் சிவகார்த்திகேயன் ஒரு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானிடம், 'முன்னாடி இருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், 'வயது ஏறியிருக்கிறது' என்று ஒரே வார்த்தையில் பல்பு கொடுத்தார். அந்த வீடியோ இப்போது திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications