பாரதிராஜாவோடு ஈவ்னிங் ஜாலியா இருக்கலாம்.. ஆனால், அதை செய்யவே மாட்டாரு.. சொன்னது யார் தெரியுமா?
சென்னை: பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினிக்கு தம்பியாக அறிமுகம் ஆனவர் விவேக். அதன்பிறகு காமெடி, ஹீரோ, நட்சத்திர பேச்சாளர் என பலமுகங்களோடு தமிழ் திரையுலகை கலக்கினார். ஆனால், அவர் எல்லோருடனும் அன்போடு பழகக்கூடியவர் என அனைவரும் அறிந்ததுதான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த இயக்குநர்கள் சங்க விழாவில் பேசிய விவேக் பாரதிராஜா எப்படிப்பட்டவர் என்பதை ரொம்ப இயல்பா சொல்லியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விவேக் மறைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை என ரசிகர்கள் கண்ணீரோடு கமெண்ட் செய்கின்றனர்.
1980களுக்கு பிறகு வந்த தமிழ் படங்களில் காமெடி காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் விவேக். இவர் நடித்த மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன், படிக்காதவன், மாப்பிள்ளை, பாளையத்து அம்மன், என பல படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார். இவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் ரசிக்கும் படி இருக்கின்றன. யூத் படத்தில் கருத்து கந்தசாமியாக வந்து காமெடியில் கருத்து ஊசி போட்டவர் விவேக். உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் ஜாதகத்தால் ஒரு இளைஞனின் வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை காமெடியுடன் சிந்திக்க வைத்திருப்பார்.

அதேபான்று வி.சேகர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், கந்தா கடம்பா கதிர்வேலா, காலம் மாறிப்போச்சு போன்ற படங்களில் இவரும் வடிவேலும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகளை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம். தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற பெயரையும் எடுத்து தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். விவேக்கை பற்றி அறியாத அல்லது தெரியாத பல விசயங்கள் இருக்கின்றன. குறிப்பாக சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் மொட்டை வேடத்தில் பாஸ் மொட்டை பாஸ் என வசனம் பேசி ஸ்டைலாக நடந்து வருவார். அப்போது விவேக் தன் தலையில் இருக்கும் கண்ணாடியை இறக்கி மாஸாக வருவார். இந்த காட்சியை பார்த்து ரஜினிகாந்தே மிரண்டு போய்விட்டாராம்.
விவேக் ரொம்ப லவ்லி: சார் விவேக் சாதாரண ஆள் இல்லை. என்னை விட மாஸாக இருக்கிறார் என ஷங்கரிடமே தெரிவித்திருக்கிறார். இப்படி ஒன்றா இரண்டா தனக்கு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சைடு கேப்பில் ஸ்கோர் செய்யக்கூடியவர் விவேக். சிறந்த ஆளுமை கொண்ட நடிகராகவும் திகழ்ந்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் மாதவன் அளித்த பேட்டியில், முதல் முறையாக அலைபாயுதே படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறேன். அவர் விரும்பும் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மின்னலே படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம். அதில் அவர் வேற மாதிரி இருப்பார். மேடி சீன் வரும்போது விவேக் பயங்கரமா அட்டகாசமா வருவார். நான் ரொம்ப எக்ஸைட் ஆகியிருக்கேன். அதுக்கப்புறம் ரன், டும் டும் டும் படத்தில் நடித்தோம். விவேக் சார் ரொம்ப லவ்லி பர்சன் என மாதவன் தெரிவித்திருக்கிறார்.

கலாம் மீதான பேரன்பு: வடிவேலு, பிரபுதேவா காம்போ மாதிரி, மாதவன் விவேக் காம்போ தரமானதாக இருக்கும் என ரசிகர்களும் தெரிவித்திருக்கின்றனர். கலாம் மீது பேரன்பு கொண்டிருக்கும் விவேக். அவரிடமே கனவுகளை பற்றி கேள்வி கேட்டு வியக்க வைத்திருப்பார். விஞ்ஞானியாக இருந்த கலாமை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர். துன்பம் மறக்க சிரிக்க வைத்தவர் மட்டும் அல்ல பார்வையாளர்களை சிந்திக்க வைத்தும் சென்றிருக்கிறார். விவேக். தனுஷ் -விவேக் காம்போவை மறக்க முடியுமா. இன்றைக்கும் படிக்காதவன் படம் பார்த்தால் தனுஷை மறந்து விவேக்கை ரசிப்பார்கள். அந்தளவிற்கு அவரது காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.
படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற சமரசிமா ரெட்டி, சம்சாக்குள்ள ரொட்டியா என கலாய்த்திருப்பார். அதேபோன்று உங்களையே நம்பி இருக்காங்களே அவங்களுக்கு என்ன செய்ய போறீங்க, கூடவே இருக்க உங்களுக்கு ஏதாவது செஞ்சிருக்கேனா இல்லை, அப்ப அதுதான் அவங்களுக்கும் போய் சொல்லுடா மாடுலேசனை மாத்தி ரசிக்க வைத்திருப்பார். மாறுவேடத்திற்கான அழகையே கெடுத்திட்டிங்க என சொல்லும்போதும் சரி குபீர் சிரிப்பை ஏற்படுத்தும். அது வலிடா வேற டிபார்ட்மென்ட் என சொல்லிக்கொண்டே போகலாம். பார்த்திபன் படத்தில் வேலை வெட்டி இல்லாத கணவர்.ரன் படத்தில் காக்கா பிரியாணி என அசத்தியிருப்பார் விவேக்.

பாரதிராஜா சிறந்த இயக்குநர்: நடிகர் விவேக் நடிகர் மட்டும் அல்ல நல்ல சிந்தனையாளர். அவர் மேடை பேச்சுக்களை பார்த்து ரசித்துகொண்டே இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்பு நடந்த இயக்குநர் சங்க விழா மேடையில் பேசிய விவேக், இயக்குநர் பாரதிராஜாவை பற்றி சிலாகித்து பேசினார். அதாவது, சினிமாவுக்கு வாய்ப்பு தேடி அலையும் போது எப்படியாவது பாரதிராஜா சார் படத்தில் ஒரு காட்சியாவது நடிக்க வேண்டும் என வெறி. மதுரை மண்ணின் மைந்தன், புத்திர குணம் கொண்டவர் பாரதிராஜா. கடைசிவரைக்கும் மனோஜ் கிரிேயேஷன் வாசலுக்குள்ள விடவே இல்லை என மதுரை குசும்போடு பேசினார். பின்னர், கவிதாலயா கதவு திறந்தது வேற கதை. ஆனால், பாரதிராஜா சார் மாதிரி ஒரு மனுஷன் கூட இருந்தால் ஈவ்னிங் மேல ஜாலியாக இருக்கலாம். ஜாலி செம ஜாலி இதை மேடையில் சொல்ல முடியாது. அப்புறமா ரகசியமா சொல்றேன் என்றார்.
பின்னர் பேசிய விவேக், இளையராஜா, மணிரத்னம், பாலச்சந்தர் போன்ற மேதைகள் இருக்கும் இடத்தில் எங்கள் சார் பாரதிராஜாவும் இருப்பது எங்களுக்கும் மிகவும் பெருமை. அவர் இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு அவர் எடுத்த மொத்த படத்தையும் போட்டு காண்பித்தபோது எனக்கு தேசிய விருது கிடைத்தது போன்ற பீல் வந்துடுச்சு. யாருங்க பண்ணுவா அதுதான் பாரதிராஜா என சிலாகித்து பேசினார். பொம்மலாட்டம் படத்தில் அவர் நடித்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அவர் சிறந்த மனிதரும் கூட என தெரிவித்தார். அவர் இயக்கிய முதல் மரியாதை படத்தை பார்த்து பாரதிராஜா சாருக்கு 16 கடிதம் எழுதினேன். ஆனால், அவர் ஒரு கடிதத்திற்கு கூட பதில் கடிதம் அனுப்பவில்லை.
ஆனால் எங்க பாலச்சந்தர் சார் அப்படி இல்லை பாரதிராஜா சார் அவள் ஒரு தொடர்கதை படத்திற்காக அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் போட்டார். இப்ப தெரிந்துகொள்ளுங்கள் பாரதிராஜா சார். ஆனால் நான் ஒரு வெள்ளந்திங்க என்றும் பேசியிருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விவேக் சார் இன்று நம்முடன் இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று தான். அவர் சிரிப்பாலும், பேச்சிலும் மக்களோடு கலந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











