உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. லவ் யூ.. ஜெயம் ரவியிடம் ஓபனாக பேசிய ஆர்த்தி.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. இந்தச் சூழலில் அவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடிக்க ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இருப்பினும் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார். அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஆக்ஷன் ஹீரோவாகவும் வலம் வந்தார்.

மெகா ஹிட் தனி ஒருவன்: தனி ஒருவன் படம்தான் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய சொந்த கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பக்கா ஆக்ஷன் த்ரில்லராகவும், சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் வகையிலும் உருவான அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக அவர் சைரன் படத்தில் நடித்திருந்தார்.
மனைவி ஆர்த்தி: இதற்கிடையே ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்துவந்த சூழலில்; இப்போது அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த சில காலமாகவே ஒரு தகவல் ஓடியது. ஆனால் கடந்த மாதம் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி; அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார். அதேசமயம் அவருடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் ஆர்த்தி.
விவாகரத்து: இதனால் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதனை சில நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவி உறுதி செய்திருந்தார். ஆனால் ரவி எடுத்த முடிவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆர்த்தி கூற; அவருக்கு நான் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன் என்றும்; இன்னொரு பெண்ணை இதில் என்னுடன் இணைத்து பேசாதீர்கள் என்றும் நேற்று ரவி தெரிவித்தார். இதற்கிடையே ஆர்த்திக்கு ஆதரவாக குஷ்பூவும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவி ரிகழ்ச்சியில் வைத்துக்கொண்டே ஆர்த்திக்கு ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த ஆர்த்தியிடம் என்ன பண்ற எப்படி இருக்க என்று கேட்டதற்கு ஆர்த்தியோ மிஸ் யூ குக்கு, ஐ லவ் யூ என்று காதலோடு சொல்கிறார். உடனே ஜெயம் ரவியும் ஐ லவ் யூ சொல்லிவிட்டு மாத்திரை சாப்பிட்டியா என்று கேட்க, யா குக்கு என்று சொல்லிவிட்டு டேக் கேர் ஆஃப் மீ என்றும் கூறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு காதலோடு இருந்திருக்காங்க இப்போ பிரிந்துவிட்டார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











