நானும், அவரும் மெத்தையில் விழுந்தோம்.. என்னுடைய வயிற்றில் கமல் அப்படி செய்தார்.. அபிராமி ஓபன் டாக்

சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இடையில் திருமணம் செய்துகொண்டதால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அர்ஜுன் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அபிராமி. படம் டீசண்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நல்ல நடிகை: தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

Abhirami shared an incident that happened with Kamal while acting in the film Virumaandi
Photo Credit:

அன்னலட்சுமியாக ஸ்கோர் செய்த அபிராமி: கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி.

திருமணம் செய்துகொண்ட அபி: பெரிய ரவுண்டு வருவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். குறிப்பாக லைம் லைட்டுகே வராமல் இருந்தார். அதனையடுத்து மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியதை தொடர்ந்து கோலிவுட், மல்லுவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன், தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வந்தன. அடுத்ததாக அவர் ஜன நாயகன் படத்திலும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அபிராமி பேட்டி: இந்நிலையில் நடிகை அபிராமி கொடுத்த த்ரோபேக் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அந்தப் பேட்டியில் அவர், "விருமாண்டி படத்தின் உன்னைவிட பாடலின் இரண்டாவது சரணத்தில் நானும், கமலும் மெத்தையில் விழும்படி ஒரு ஷாட் வரும். மெத்தையில் விழும்போது பேசும் வசனத்தில் 'அப்பா' என்று சொல்ல வேண்டும். டப்பிங்கின்போது அதை வித்தியாசமான மாடுலேஷனில் சொல்ல ட்ரை செய்தேன். கமலும் அதைத்தான் விரும்பினார். ஆனால் அது எனக்கு வரவில்லை.

வயிற்றில் குத்திவிட்டார்: இரண்டு, மூன்று டேக்குகள் போயும் வரவில்லை. உடனே அருகில் கமலோ, இன்னும் ஒரு தடவை பேசு என சொல்ல; நானும் அந்த டயலாக்கை பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென எனது வயிற்றில் குத்திவிட்டார். நான் உடனே அப்பா என்று சொன்னேன். அப்போதுதான் நாங்கள் நினைத்தபடி அந்த அப்பா என்ற வார்த்தை வந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X