நான் பேசியது ஐஸ்வர்யா ராய்க்கு புரியல.. மனைவியுடனான முதல் சந்திப்பு குறித்து அபிஷேக் பச்சன்

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் சந்தித்துக் கொண்டது தொடர்பான செய்திகள் உலா வருகின்றது.

கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் வெற்றியும் பெற்றார். ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னர் பல இந்திய மாடல்கள், நடிகைகள் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர். ஆனால் யாரும் ஐஸ்வர்யா ராய் கொண்டாடப்பட்ட அளவிற்கு கொண்டாடப்படவில்லை. இதனாலே ஐஸ்வர்யா ராய் என்றால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நன்கு பழக்கப்பட்ட பெயராக மாறியது. பல பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு ஐஸ்வர்யா என இதன் காரணத்தினாலே பெயர் வைத்துள்ளனர். இன்றைக்கும் கிண்டல் செய்பவர்கள், 'உன் மனசுல என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராய்னு நெனப்பா?' என கேட்பதை பார்க்க முடியும்.

Abhishek Bachchan Aishwarya Rai Throwback

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும் அதற்கு முக்கிய காரணமே அபிசேக் பச்சன் தான் எனவும் ஹிந்தி ஊடகங்களில் கிசுகிசுக்கள் பறந்த வண்ணம் உள்ளது.

Abhishek Bachchan Aishwarya Rai Throwback

அம்பானி வீட்டு கல்யாணம்: இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரது திருமணத்தில் கலந்து கொண்டபோது கூட, இருவரும் தனித்தனியே கலந்து கொண்டனர். குறிப்பாக மகள் ஆராத்யா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள, அபிஷேக் பச்சன் தனியே கலந்து கொண்டார். இது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யா ராய் கையில் அவர்களது திருமண மோதிரம் இல்லை என கூறப்பட்டது.

Abhishek Bachchan Aishwarya Rai Throwback

புகைச்சல்: இந்த விவகாரம் இவர்களுக்கு இடையிலான பிரிவு என்பது கிட்டத்தட்ட உறுதிதான் போல என பார்ப்பவர்களுக்கு தோன்ற வைத்தது. சமீபத்தில் கூட விமான நிலையத்தில் தனது மகளுடன் ஐஸ்வர்யா ராய் இருந்துள்ளார். அப்போது அபிஷேக் இல்லாததும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரின் முதல் சந்திப்பு குறித்து , முன்பு ஒரு பேட்டியில் அபிஷேக் பச்சன் கூறியது இணையத்தில் உலா வருகின்றது.

Abhishek Bachchan Aishwarya Rai Throwback

முதல் சந்திப்பு: அதில், இவர்கள் இருவரும் கடந்த 1990ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா ராய் அவுர் பியார் ஹோ கயா படத்தில் நடித்துக் கொண்டு உள்ளனர். படப்பிடிப்பின் போது இரவு உணவிற்கு வெளியே சென்றபோது இருவரும் முதல்முறையாக சந்தித்துள்ளனர். அப்போது அபிஷேக் வெளிநாட்டில் தனது படிப்பினை முடித்துவிட்டு வந்துள்ளார். அபிஷேக் பச்சன் சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வியில் வெளிநாட்டில் படித்தவர் என்பதால், அபிஷேக் பச்சன் முதன் முதலில் ஐஸ்வர்யா ராயிடம் பேசியது, ஐஸ்வர்யாவுக்கு புரியவில்லையாம். அவ்வளவு வேகமாகவும் மிகவும் ஸ்டைலான ஆங்கிலத்தில் பேசியுள்ளார் அபிஷேக். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் உலா வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X