ஷங்கரின் 4 படங்களை நிராகரித்த அஜித்.. வெளியான தகவல்.. என்ன இந்தப் படங்களா -ஷாக்கிங்கில் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்கள் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்தப் படங்களை தொடர்ந்து அடத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் தன்னுடைய ஏகே62 படத்திற்காக இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்தப் படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணையவிருந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரின் அடுத்தப்படத்தின் அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்த அஜித் படங்கள்
நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார் இயக்குநர் ஹெச் வினோத். இந்தப் படங்களை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரித்திருந்தார். இந்தப் படங்கள் விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்ரீதியாக தயாரிப்பாளருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. குறிப்பாக கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காத்திருக்கும் ரசிகர்கள்
நடிகர் அஜித் 30 ஆண்டுகளை தாண்டி திரையில் சிறப்பான பல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். பாலிவுட்டிலும் ஸ்ரீதேவியுடன் இணைந்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவே தற்போது தொடர்ந்து போனிகபூரின் தயாரிப்பில் அடுத்தடுத்த மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். இந்நிலையில் அடுத்ததாக அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விரைவில் ஏகே62 பட அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏகே 62 படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது மகிழ்திருமேனி ஏகே62 படத்தை இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள ரீசன்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன.

அஜித்தின் ரீசன்ட் கிளிக்ஸ்
மேலும் அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அஜித் மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட பேமிலி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் துணிவு படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்மார்ட்டான அஜித்தை பார்க்க முடிகிறது. அஜித் ரசிகர் மன்றம் உள்ளிட்ட எதுவும் இல்லாமலேயே ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். தன்னை தல என்று அழைப்பதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஷங்கர் படங்களை தவிர்த்த அஜித்
இதனிடையே பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவில்லை என்ற குறை ரசிகர்களிடையே உள்ளது. ஆனால் 4 முறை அஜித்தை வைத்து படமியக்க ஷங்கர் ஸ்கிரிப்ட் ரெடி செய்ததாகவும் ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப் படங்களில் அஜித்தால் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி அஜித் இந்தப் படங்களை தவிர்த்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜீன்ஸ் படத்தில் கமிட்டான அஜித்
கடந்த 1998ம் ஆண்டில் வெளியான ஜீன்ஸ் படத்தில் முதலில் அஜித்தான் கமிட்டாகியிருந்தாராம். அஜித்தை வைத்து 3 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங்கும் நடந்த நிலையில், அந்தப் படத்திலிருந்து அஜித் விலகினார். தன்னுடைய படங்களுக்காக பிரம்மாண்டமான விளம்பரங்களை செய்யும் வழக்கமுடையவர் ஷங்கர். அந்தப் படத்தில் பிரமோஷன்களில் அஜித் பங்கேற்காததே அவர் இந்தப் படத்தில் நடிக்காததற்கு காரணமாக கூறப்படுகிறது.

அஜித்திற்காக உருவான கதை
இதையடுத்து சிவாஜி, முதல்வன் மற்றும் எந்திரன் படங்களும் அஜித்தை மனதில வைத்தே முதலில் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டதாம். ஆனால் அஜித் இந்தப் படங்களில் நடிக்காமல் போன நிலையில், அதையடுத்து தன்னுடைய எந்தப் படத்திற்காகவும் அஜித்தை இயக்குநர் ஷங்கர் அணுகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சில வருடங்கள் கழித்து பேஸ்புக்கில் இணைந்த இயக்குநர் ஷங்கர், தன்னுடைய முதல் பதிவில் அஜித் மற்றும் அவரது ஆரம்பம் படம் குறித்த பதிவைத்தான் போட்டாராம்.


Click it and Unblock the Notifications











