உனக்கு வாக்கப்பட்டு வருசங்கள் போனா என்ன.. அருண் பாண்டியனுக்கு 60வது கல்யாணம்.. லவ்லி புகைப்படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். 80 மற்றும் 90களில் கலக்கிக் கொண்டு இருந்த அருண் பாண்டியன், 2000 களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகினார். அதன் பின்னர் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கூட டிமான்டி காலனி படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி 60வது கல்யாண விழா கொண்டாடப் பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மாலையும் கழுத்துமாக அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களில் இவர்களின் மூன்று மகள்களான கீர்த்தி பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் என மூவரும் உள்ளார்கள். 60வது கல்யாண மேடையில் அருண் பாண்டியனும் இவரது மனைவி விஜயா பாண்டியனும் வாஞ்சையோடு பார்த்துக் கொள்ளும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
60வது கலுயாணம் என்பது இந்து மதத்தில் நடைபெறும் ஒரு சடங்காகும். இந்த சடங்கினை தம்பதியர்களில் ஆண் 60 வயதை அடையும்போது 60வது கல்யாணம் என்ற சடங்கு நடத்தப்படும். இதில் மிகவும் முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் 60 வயதை எட்டியிருந்தாலும், அவர்களுக்கு திருமணம் செய்து முடித்த பின்னரே தங்களது 60வது கல்யாணத்தை செய்து கொள்வார்கள். ஆனாலும் அருண் பாண்டியனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு 60வது கல்யாணம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கீர்த்தி பாண்டியனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அருண் பாண்டியன் கடந்த 1958ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பிறந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்திருந்தாலும் தற்போது, இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











