நடிகரை அடிக்க சென்ற ரசிகர்கள்.. அஜித் செய்த தரமான சம்பவம்.. இப்படியும் நடந்திருக்கா?
தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மேலும் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து நடிகர் பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவருக்கென்ற ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரது படம் வந்தால் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.

ஏகே : தொடர்ந்து தீனா, வரலாறு உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைய மீண்டும் தோல்வியை சந்தித்தார். பிறகு மீண்டு வந்து பில்லா படத்தில் வெற்றி கண்டார். அதன் பிறகும் அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் தவிர்த்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார்.
பாவா லட்சுமணன் பேட்டி: இந்நிலையில் அஜித் குறித்து நடிகர் பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் பேசுகையில், "ஜனா படத்தில் நான் அவருடன் நடித்தபோது அவரது ரசிகர்கள் மொட்டை அடித்துக்கொண்டு அவரை பார்க்க வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த சமயத்தில் கூட்டத்தை க்ளியர் செய்யும் வேலையை நான் பார்த்துக்கொண்டென். பிறகு நான் ஒரு இடத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த சிலர், 'டேய் இவன் யாருனு தெரியுதா.. அவன் டா' என்று சொல்லி என்னை அடிக்க வந்துவிட்டார்கள்
நான் உடனடியாக அஜித்தின் கேரவனுக்கு வந்தேன். விஷயத்தை கேள்விப்பட்ட அவர் உடனே அந்த ரசிகர்களிடம் வந்து, டேய் எதுக்கு லட்சுமணன அடிக்கப்போறீங்க. அவர் அவரோடு ட்யூட்டிய செஞ்சாரு.. ஃபோட்டோ எடுக்க சொன்னீங்க எடுத்தாச்சு. எல்லோரும் கிளம்புங்கடா என்று சொன்னார்.அதற்கு பிறகுதான் அவர்கள் கிளம்பினார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











