Delhi Ganesh: டெல்லி கணேஷ் சொன்ன பொய்... அது அவரோட ஃபேவரைட்டாம்.. பிளாஷ்பேக் வீடியோ!

சென்னை: மூத்த கலைஞராக அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணக்கமாக செயல்பட்டு வந்தவர் டெல்லி கணேஷ். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் அடுத்தடுத்த படங்களில் வில்லனாகவும் காமெடியனாகவும் மிரட்டலான பர்பார்மென்சை கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் விஜய்யுடனும் இணைந்து காமெடி கலாட்டா செய்துள்ளார்.

அவ்வை சண்முகி போன்ற படங்களில் அவர் செய்த காமெடியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது. இதேபோல விஜய்யுடன் இணைந்து தமிழன் படத்தில் டெல்லி கணேஷின் காமெடி காட்சிகள் அசத்தலாக அமைந்திருக்கும். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் இன்று நம்முடன் இல்லை. உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அவர் காலமாகியுள்ளார்.

delhi ganesh tamil cinema

நடிகர் டெல்லி கணேஷ்: நடிகர் டெல்லி கணேஷ் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முந்தைய தலைமுறை நடிகர்களுடன் மட்டுமில்லாமல் விஜய், சூர்யா என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை டெல்லி கணேஷிற்கு பெற்றுத் தந்தன. 81 வயதான நிலையிலும் அடுத்தடுத்த படங்களிலும் வெப் தொடர்களிலும் குறுந்தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு டெல்லி கணேஷ் மறைந்தார். கடந்த 3 நாட்களாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கணேஷ் ஆசை: கடந்த 1976ம் ஆண்டில் கே பாலசந்தரின் பட்டின பிரவேசம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் டெல்லி கணேஷ். சினிமாவில் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் இவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய நாடக கம்பெனியை ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். தன்னுடைய மகன் மகா கணேஷை ஹீரோவாக்கும் விருப்பம் இவருக்கு அதிகமாக இருந்தது. ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தான் சாகும்வரையில் படங்களில் நடித்துவந்த போதிலும் தன்னுடைய மகனை ஹீரோவாக்கும் அவரது ஆசை நிராசையாக மாறியுள்ளது.

டெல்லி கணேஷின் ஃபேவரிட் பொய்: சினிமாவில் மட்டுமில்லாமல் நேரிலும் அதிகமாக காமெடி கலாட்டா செய்வார் டெல்லி கணேஷ். அந்த வகையில் அவர் கொடுத்திருந்த பழைய பேட்டியொன்றில், அவரிடம் அவர் சொன்ன ஃபேவரிட்டான பொய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தான் ஒரு ஷார்ட் ஃபிலிமில் நடித்ததாகவும் அதற்காக அவருடைய பெயரை ஆஸ்கருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அநேகமாக தான் அதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருக்கும் என்றும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறியதாகவும், இதைக் கேட்டு அப்படியா, நமக்கு தெரிந்தவருக்கு ஆஸ்கர் என்பது வியப்பாக இருப்பதாக எதிரில் இருந்தவர் கூறியதாகவும் டெல்லி கணேஷ் தன்னுடைய பேடடியில் கூறியுள்ளார்.

400க்கும் மேற்பட்ட படங்கள்: இது தன்னுடைய ஃபேவரிட் பொய் என்று அவர் குறிப்பிட்டாலும் விருதுகள்தான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்பதை அவர் இந்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது. தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் டெல்லி கணேஷ். இவரது நடிப்பில் அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தமிழன், நாயகன் என எவர்கிரீன் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இந்த வகையில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷின் மறைவு திரையுலகினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X