ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்.. நான் என்ன சாதனை செய்தேன்.. ரஜினி செய்ததுதான் சாதனை.. ஓபனாக பேசிய கமல்

சென்னை: கமல்ஹாசனின் நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் படம் பயங்கர அடி வாங்கியது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படமாவது அவருக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ராஜ்ய சபா எம்பியாகவும் ஆகியிருக்கிறார் கமல். இந்நிலையில் அவர் பற்றி ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசு ஒரு பேட்டியில் பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர் கமல்ஹாசன் என்று பலரும் சொல்வார்கள். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வேறு சில துறைகளிலும் இருந்திருக்கிறார். அதனையடுத்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கமலை ஹீரோவாக அறிமுகமாக்க; குறுகிய காலத்திலேயே முன்னணி மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுவிட்டார். அந்த வயதிலேயே எக்ஸ்பெரிமென்ட்டல் கதைகளை தேர்வு செய்து நடித்து தனி முத்திரை பதித்தார்.

கமலின் அடுத்த முகம்: வளர வளர இவரது மேஜும் எங்கேயோ சென்றது. ஒருகட்டத்தில் அவருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை சினிமாவில் என்ற பிம்பமும் உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவர் அரசியல் பிரவேசம் செய்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த வரவேற்பை அரசியல் அவருக்கு கொடுக்கவில்லை. இப்போதும் அரசியலில் இயங்கிவந்தாலும் சினிமாவிலும் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.

Actor Ilavarasu says Kamal Haasan praised Rajinikanth
Photo Credit:

இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்ற்றம்: அதன்படி தனது செகண்ட் இன்னிங்ஸை லோகேஷ் கனகராஜோடு தொடங்கினார் அவர். விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமலையும் அதே எனர்ஜியோடு ரசிகர்கள் பார்த்தார்கள். உலக அளவில் 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்தது. இது உற்சாகம் கொடுத்ததை அடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டானார். அப்படி அவர் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை மட்டுமின்றி கடுமையான கிண்டல்களையும் சந்தித்தது.

தக் லைஃப்பும் அடிதான்: இந்தியன் 2தான் அடி வாங்கிவிட்டது; மணிரத்னத்தோடு இணைந்த தக் லைஃப் படமாவது காப்பாற்றும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அப்படமும் தோல்வியையே சந்தித்தது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசு டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

இளவரசு பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்தேன். அந்தப் படத்தி சலீம் என்பவர் நீண்ட் வருடங்களுக்கு பிறகு கமல் படத்தில் பணியாற்றினார். ஒரு ஷாட்டுக்காக கமல்ஹாசன் பஞ்சை தனது மூக்கின் உள்ளே வைத்துக்கொண்டார். அப்போது அவரை பார்த்த சலீம், 'இப்படி வைக்கிறீங்களே. நீங்கள் பஞ்சை உள்ளே இழுத்தால் விபரீதம்' என்று சொன்னார். ஆனால் கமலோ சலீமின் பேச்சை கேட்கவில்லை.

கமல் சொன்னது: சலீம் சொன்னபடியே பஞ்சை உள்ளே இழுத்துவிட்டார் கமல். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அந்த பஞ்சு வெளியே எடுக்கப்பட்டது. மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அவர் என்னிடம், 'என்னங்க நான் உலக நாயகன். இதுதான் வாழ்க்கைனு நினைச்சு வந்தவன் நான். ஆனால் வயலில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்த ஒருவர் இசையமைக்க வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தாரே. இளையராஜா செய்தது சாதனை.

பெங்களூருவில் கன்டக்டர் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு; இங்கு வந்து நடித்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தாரே ரஜினிகாந்த். அவர் செய்தது சாதனை. மலேரியா இன்ஸ்பெக்டராக இருந்துவிட்டு சினிமா எடுக்க வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மாற்றினாரே பாரதிராஜா. அவர் செய்தது சாதனை. நான் செய்தது எல்லாம் எப்படி சாதனை ஆகும் என கூறினார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X