Trisha - கொலை செய்ய பார்த்த த்ரிஷா - க்ளாஸ் எடுத்து திருத்திய நடிகர்கள்
சென்னை: Trisha (த்ரிஷா) பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து இரண்டு நடிகர்கள் க்ளாஸ் எடுத்திருக்கின்றனர்.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் த்ரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே த்ரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை த்ரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக த்ரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் த்ரிஷா.
லைம் லைட்டில் த்ரிஷா: ஒரு ஹீரோயினின் பீக் காலம் 10 வருடங்கள்தான் என பலரும் கணித்த நிலையில் அந்த கணிப்புகளை உடைத்த கதாநாயகியும் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக அவர் பீக்கில் இருந்துவருகிறார். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்துவருகிறார். விஜய்யும், த்ரிஷாவும் கடைசியாக குருவி படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வனில் த்ரிஷா: தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். அதை படமாக்குவதற்கு எம்ஜிஆரிலிருந்து, கமல் ஹாசன் வரை முயன்றார்கள். ஆனால், அவர்களது முயற்சி கைகூடவில்லை. அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியானது. இதிலும் த்ரிஷா குந்தவையாக நடித்திருக்கிறார். நாவலில் குந்தவை கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
குந்தவையாக கலக்கிய த்ரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சிலர் கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு த்ரிஷா தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

க்ளாஸ் எடுத்த நடிகர்கள்: இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவுக்கு கார்த்தியும், ஜெயம் ரவியும் க்ளாஸ் எடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது த்ரிஷாவுக்கு தமிழ் ஓரளவுதான் தெரியும். ஆனால், பொன்னியின் செல்வன் சங்க காலத்தில் நடந்த கதை. எனவே செந்தமிழை பேச வேண்டும். படத்தில் அவருக்கு கிருத்திகா நெல்சன் என்பவர் டப்பிங் கொடுத்திருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்தி, ஜெயம் ரவியிடம் தமிழில் பேசுவாராம் த்ரிஷா.
அப்போது அவர் குந்தவை என்பதைக்கூட குந்த்வை என்றே சொல்வாராம். அதேபோல், அவர்களிடம் செந்தமிழ் என்பதற்கு பதிலாக செண்ட் தமிழ் என்றாராம். இதை ரொம்பநாளாகவே அப்படியே சொல்லிக்கொண்டிருக்க ஒரு நாள் த்ரிஷாவை அமரவைத்து செந்தமிழ் சொல்லு என்றனராம் இருவரும்., அவரும் மீண்டும் செண்ட் தமிழ் என்றே கூறினாராம்.
அதன் பிறகு அது செண்ட் தமிழ் இல்லை செந்தமிழ் என தொடர்ந்து க்ளாஸ் எடுத்துக்கொண்டே இருந்தனராம் ரவியும், கார்த்தியும்.அதன் பிறகே அவர் செண்ட் தமிழ் என்பதை செந்தமிழ் என சொல்ல கற்றுக்கொண்டாராம். இதனை ஜெயம் ரவி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை தமிழை கொலை செய்ய பார்த்த த்ரிஷாவை இருவரும் திருத்தியிருக்கிறார்கள் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











