Vijay: படத்தை தனதாக்கிக் கொண்ட விஜய்.. நண்பன் படத்தை பாராட்டிய கமல்!

சென்னை: நடிகர் விஜய் தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் சாதித்து வருகிறார். தமிழில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்றைய தினம் நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 50 வயதை நெருங்கிய நிலையிலும் தன்னை மிகவும் இளமையாக ரசிகர்களிடையே வெளிப்படுத்தி வருகிறார் விஜய்.

விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

Actor Kamal haasan hails Vijay and his Nanban movie -throwback video trends on Vijay birthday

விஜய்யின் நண்பன் படத்தை பாராட்டிய கமல்ஹாசன்: நடிகர் விஜய் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மட்டும் சோடை போவதில்லை. அந்த அளவிற்கு அதிகமான ஃபேன் பேசை கொண்ட நடிகராக விஜய் காணப்படுகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய்யின் வாரிசு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வசூல் வேட்டையாடியது.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. மேலும் படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாக முன்னதாக ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகன் விஜய் தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி இணையதளத்தில் அவரது ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். சிறப்பான காமன் டிபி வெளியாகியுள்ள நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நா ரெடி பாடலும் இன்றைய தினம் வெளியாகவுள்ளது.

முன்னதாக விஜய் -ஷங்கர் காம்பினேஷனில் வெளியான நண்பன் படம் விஜய்யின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். சத்யராஜ், இலியானாவும் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், பிரம்மாண்டமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் மிகவும் யூத்தான பாசிட்டிவ்வான கேரக்டரில் கல்லூரி மாணவனாக விஜய் நடித்திருந்தார்.

Actor Kamal haasan hails Vijay and his Nanban movie -throwback video trends on Vijay birthday

இதனிடையே, இந்தப் படம் குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்து தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ரீமேக் படங்கள் வெளியாகும்போது வரும் ஒப்பீடுகளை இந்தப் படம் தகர்த்ததாகவும் இந்தப் படத்தை தன்னுடைய நடிப்பின்மூலம் விஜய் தனதாக்கிக் கொண்டுள்ளதாகவும் கமல் இந்தப் பேட்டியில் கூறியுள்ளார். ஒரு நல்ல நட்பை பார்த்த சந்தோஷத்தை உடன் நடித்தவர்களும் ஏற்படுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

படத்தில் முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடித்திருந்தாலும் அவர்களுக்குள் தானும் ஒரு நாயகன் என்ற ஈகோவை பார்க்க முடியவில்லை என்றும் கமல் பாராட்டியிருந்தார். இந்நிலையில், இதுபோன்ற மல்ட்டி ஸ்டாரர் படங்கள் தொடர்ந்து வெளியாக வேண்டும் என்றும் அதற்கான ஆரம்பமாக நண்பன் இருக்கட்டும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்திற்கேற்பவே சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான விக்ரம் படம் மல்ட்டி ஸ்டாரர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X