Kamal haasan: எனக்கு கெட்ட வார்த்தை சொல்லித் தந்தது என்னுடைய அப்பாதான்.. கமல் பளீச்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அந்த அளவிற்கு சினிமாவில் அனைத்து விஷயங்களிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளவர்.
இந்திய அளவில் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார்.
தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சேனாபதி கேரக்டரில் நடிப்பதற்காக அதிகமாக மெனக்கெட்டு வருகிறார்.

கெட்ட வார்த்தைகள் குறித்து பேசிய கமல்: நடிகர் கமல்ஹாசன் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். உலகநாயகனாக தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்தப் பட்டத்திற்கு ஏற்றாற்போல, தன்னை சினிமாவின் அனைத்து பக்கங்களிலும் மெருகேற்றிக் கொண்டுள்ளார். சினிமாவின் விக்கிபீடியாவாக சக கலைஞர்களும், இளைய தலைமுறை நடிகர்களும் இவரை கொண்டாடி வருகின்றனர். அந்த அளவிற்கு நடிப்பில் மட்டுமில்லாமல் சினிமாவில் தொழில்நுட்ப பிரிவுகளிலும் ஞானம் உள்ளவராக காணப்படுகிறார்.
கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்திற்காக படங்களை தயாரித்து வருகிறார். அதேபோல தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்தடுத்தப் படங்களில் தன்னை இணைத்து வருகிறார். அடுத்ததாக பிரபாசின் கல்கி 2898 AD படத்திலும் வில்லனாக கமிட்டாகி நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்திலும் மணிரத்னம் இயக்கத்திலும் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்கவுள்ளார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தன்னை வைத்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன். இவரது இந்த சுறுசுறுப்பு இளைய தலைமுறை கலைஞர்களுக்கும் உத்வேகமாக அமைந்து வருகிறது. சமீபத்தில் கல்கி படத்தின் டைட்டில் வெளியீடு அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், பிரபாஸ் உள்ளிட்ட இளைய தலைமுறை கலைஞர்களுக்கு முன்னதாக அந்த அந்த நிகழ்ச்சியில் போய் கலந்துக் கொண்டார்.
கமல் எப்போதுமே தன்னுடைய பேச்சில் நகைச்சுவையை இழைய விடுவார். இவரது பேட்டிகளிலும் இதை பார்க்க முடியும் அந்த வகையில், ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன், சினிமா மூலம்தான் இளையத் தலைமுறையினர் கெட்டுவிடுகிறார்கள், கெட்ட வார்த்தைகளை பேச கற்றுக் கொள்கிறார்கள் என்ற கருத்தை மறுத்துள்ளார். தான் தன்னுடைய அப்பாவிடம் இருந்துதான் கெட்ட வார்த்தைகளை கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய அப்பா தன்னை திட்டும்போது உட்கார்ந்து எழுதிட்டு வந்து திட்டறாரோன்னு சந்தேகமாக இருக்கும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், அந்த அளவிற்கு எதுகை மோனையுடன் அவர் திட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு சினிமா கெட்ட வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கவில்லை என்றும் சிவாஜியோ, எம்ஜிஆரோ தன்னுடைய படங்களில் சொல்லிக் கொடுக்கவில்லை எனறும் மாறாக தன்னுடைய அப்பாதான் தனக்கு கெட்ட வார்த்தைகளை சொல்லிக் கொடுத்தார் என்றும் அவர்


Click it and Unblock the Notifications











