என்னை அப்படி நினைச்சிட்டிங்களே.. குஷ்பூவின் திருமணத்தில் தேம்பி தேம்பி அழுத கார்த்திக்
சென்னை: நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். 80களின் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் தனது நடிப்பால் ரசிகர், ரசிகைகளை கட்டிப்போட்டவர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நடிகராக வலம் வந்தாலும் தனது தந்தை போல் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார்.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அந்தப் படம் வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகமான ராதாவுக்கும்; ஹீரோ கார்த்திக்கிற்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அலைகள் ஓய்வதில்லை ஹிட்டுக்கு பிறகு கார்த்திக்கிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

நவரச நாயகன்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட கார்த்தி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் பல வேரியேஷன்களை காண்பித்தார். தனது டயலாக் டெலிவிரி, உடல் மொழி என அனைத்திலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்ட அவர்தான் 80களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். பெண் ரசிகைகளை கவர்வது ரொம்பவே கடினம். அதனை அசால்ட்டாக செய்தார் கார்த்திக்.
ஆக்ஷன் ஹீரோவும்கூட: சாக்லேட் பாய் இமேஜுக்குள் ஒரு நடிகர் விழுந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கியவரும் கார்த்திக்தான். அவர் நடித்த அமரன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் சாக்லேட் பாயிலிருந்து ரக்கட் பாய் மோடுக்கு மாறி நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார். ஒருபக்கம் ரொமாண்ட்டிக் படம் மறுபக்கம் ஆக்ஷன் படம் என கலக்கிக்கொண்டிருந்த அவர், உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி ஜானர் படங்களிலும் நடித்து அந்த ஏரியாவிலும் பெரும் ரவுண்டு வந்தவர்.
விமர்சனம்: எவ்வளவுக்கு எவ்வளவு அவர் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றாரோ அதே அளவு அவர் மீது விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. அதாவது கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மாட்டார். வேண்டுமென்றே லேட் செய்வார் என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் அவர் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரையும் பெற்றதுண்டு. இந்தச் சூழலில் அவர் பற்றி ஒரு தகவல் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது கார்த்திக் தன்னுடன் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகளிடம் ஜாலியாக பேசக்கூடியவராம். குஷ்பூவிடமும் அப்படித்தான் பேசுவாராம். குஷ்பூவை காதலிக்கும் விஷயத்தை கார்த்திக்கிடம்தான் முதன்முதலாக சொன்னாராம் சுந்தர்.சி. குஷ்பூவும், சுந்தர்.சியும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காதலித்த பிறகுதான் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்துக்கு கார்த்திக் முதல் ஆளாக வந்துவிட்டாராம்.
தேம்பி தேம்பி அழுத கார்த்திக்: திருமணத்தில் அவரை பார்த்த குஷ்பூவும், சுந்தர்.சியும் உடனடியாக அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். கார்த்திக்கும் தனது ஆசீர்வாதத்தை வழங்கிவிட்டு சென்றுவிட்டாராம். வீட்டுக்கு சென்ற அவர் மீண்டும் ஃபோன் செய்து, நல்லபடியாக திருமணம் முடிந்தது. எனது காலில் நீங்கள் இருவரும் விழுந்ததை நினைத்து எமோஷனல் ஆகிவிட்டது என்று குஷ்பூவிடமும், சுந்தரிடமும் தேம்பி தேம்பி அழுதாராம். ஏனெனில் அவர்கள் இருவரையும் சகோதரர், சகோதரர் மனைவி என்றுதான் நினைத்தாராம் கார்த்திக். இந்தச் சம்பவத்தை குஷ்பூவே தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











