எங்கள் சம்பளத்தையும் வடிவேலு பிடுங்கிக்கொள்வார்.. பிரபல நடிகர் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: வடிவேலு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்த மாமன்னன் படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; சுந்தர்.சியுடன் கேங்கர்ஸ் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல நடிகர் கொட்டாச்சி கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஷாக்கை கொடுத்திருக்கிறது.
வைகை புயல் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் வடிவேலு காமெடி உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். காமெடி ட்ராக் எழுதி கொடுக்க அவருக்கென்று தனி டீம் இருந்தாலும்; அதனை தனது நடிப்பால் மென்மேலும் மெருகேற்றியவர் அவர். முக்கியமாக தன்னை தானே தாழ்த்திக்கொண்டு அவர் செய்த காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கட்டிப்போட்டன. இதன் காரணமாக அவர் நடிக்காத படங்களே இல்லை என்ற நிலை கோலிவுட்டில் நிலையாக இருந்தது.

அரசியல் வாசம்: சூழல் இப்படி இருக்க அவருக்கு மறைந்த விஜயகாந்த்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் விஜயகாந்த்தை பழி தீர்க்க திமுகவின் மேடைகளில் ஏறினார் வடிவேலு. ஆனால் அரசியல் மேடை அவரையும், அவரது கிராஃபையும் அதளபாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்தது. இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்த சூழலில் ஒருகட்டத்தில் வடிவேலுவை திரையிலேயே காண முடியவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.
மீண்டும் வந்த வடிவேலு: இதனையடுத்து அவருக்கு இருந்த சில பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதன் காரணமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அப்படத்தில் வடிவேலு வேறு ஒரு பரிமாணத்தில் நடித்து; தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை மீண்டும் உணர்த்தினார். இப்போது மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர்.
சுற்றும் சர்ச்சைகள்: சர்ச்சைகளிலிருந்து வடிவேலு வெளியே வந்துவிட்டார் என்று பார்த்தால் அவர் மீது சக நடிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. தங்களை அவர் வளரவே விடமாட்டார்; அடிமை போல் நடத்துவார் என்று அவருடன் நடித்த காமெடி நடிகர்கள் தொடர்ந்து கூறுவது உண்டு. அதற்கெல்லாம் வடிவேலு இதுவரை பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்யவில்லை. இந்தச் சூழலில் வடிவேலு பற்றி பிரபல நடிகர் கொட்டாச்சி கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்புவதாக இருக்கிறது.
கொட்டாச்சி பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தயாரிப்பாளர் எப்போதுமே எங்களை போன்ற நடிகர்களுக்கு மொத்தமாகத்தான் சம்பளத்தை கொடுப்பார். அதனை வடிவேலுவோ, நானே அவர்களிடம் கொடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி பிடுங்கிக்கொள்வார். தயாரிப்பாளர் எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதை வாங்கிக்கொண்டு எங்களுக்கு பாதி சம்பளம்தான் கொடுப்பார். ஆனால் விவேக் அப்படி இல்லை. தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு டெய்லி சம்பளம் எவ்வளவோ அதனை அப்படியே கொடுக்க சொல்லிவிடுவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











