Vadivelu - சார்லி சாப்ளினுக்கு பிறகு நீதான் ப்பா.. பாராட்டிய கமல்.. வடிவேலு செய்த காரியம்
சென்னை: Vadivelu (வடிவேலு) இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் ஒரு காட்சியை பார்த்துவிட்டு வடிவேலுவை கமல் ஹாசன் பாராட்டிய சம்பவம் தெரியவதிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார். இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை. சூழல் இப்படி இருக்க அவரை சுற்றிய பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. வடிவேலு இன்னமும் பழைய டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாக விமர்சனம் வைத்தனர். எனவே வடிவேலு தனது ஸ்டைலை மாற்றி தற்கால சினிமாவுக்குள் விரைவில் கலப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மாமன்னன் வடிவேலு: அந்தப் படத்துக்கு பிறகு மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்திருந்தார். மாரி செல்வராஜ் பல பேட்டிகளில் சொன்னபடியே இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னனில் காட்சிப்படுத்தியிருந்தார். வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
சந்திரமுகி 2: இதனையடுத்து பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார் வடிவேல். படம் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. சந்திரமுகி 1ல் எப்படி வடிவேலு ஸ்கோர் செய்தாரோ அதேபோல் இந்தப் படத்திலும் தனது அசாத்திய நடிப்பால் ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.வாசுக்கூட வடிவேலு என்ற மகா கலைஞனை சின்ன சின்ன பிரச்னைகளால் ஓரங்கட்டக்கூடாது என அம்மா கிரியேஷன்ஸ் சிவாவிடம் கூறியதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி: இதற்கிடையே வடிவேலு ஏகப்பட்ட படங்களில் நடித்து தன்னை நிரூபித்திருக்கிறார். அவைகளில் முக்கியமான படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேஷி. சிம்புதேவன் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த ஆம் ஆண்டு வெளியானது. மன்னர் என்றாலே ரொம்பவே இறுக்கமாக விறைப்புடன் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்த படம் புலிகேசி. அதற்கு சிம்புதேவனும், வடிவேலுவும் முக்கிய காரணம். இப்படிப்பட்ட சூழலில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் ஒரு காட்சியை பார்த்து கமல் ஹாசன் பாராட்டியது தெரியவந்திருக்கிறது.
கமலின் பாராட்டு: படத்தில் நடிகர் தியாகு புலிகேசி மீது போர் தொடுத்து வருவார். ஆனால் புலிகேசியோ அதை எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்த சமயத்தில் வடிவேலு கதவின் தாழ் துவாரம் வழியாக கண்ணை வைத்து பார்த்துக்கொண்டிருப்பார். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் புலிகெசி தாழ் துவாரத்தில் இருக்கும் இரும்பை சுற்றிக்கொண்டிருப்பார்.
நாசர் டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தபோது ஏவிஎம் கார்டனில் இந்தக் காட்சியை பார்த்திருக்கிறார் கமல் ஹாசன். உடனே நாசரிடம் வடிவேலுவுக்கு ஃபோன் பண்ணுங்க என்று சொல்ல; நாசரிடம் வடிவேலுவின் நம்பர் இல்லை. இதனையடுத்து தன்னுடைய உதவியாளரிடம் வடிவேலுவின் நம்பரை வாங்கி ஃபோன் செய்து கமலிடம் கொடுத்திருக்கிறார்.
வடிவேலுவிடம் பேசிய கமல் ஹாசன், தம்பி அந்தக் காட்சியை பார்த்தேன். இந்த உலகத்தில் சார்லி சாப்ளினுக்கு பிறகு உடல் மொழியும், லாவகமும் உங்களிடம்தான் இருக்கிறது என சொல்லியிருக்கிறார். அதற்கு வடிவேலு என்ன அண்ணே இப்டி சொல்லிட்டீங்களே ரொம்ப நன்றி என ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் வடிவேலு.
அதோடு நில்லாமல் அந்த ஃபோன் துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஏவிஎம் கார்டன் வந்து கமல் ஹாசனை சந்தித்தாராம். உடனே கமல் ஹாசன் என்ன ப்பா இதுக்காகவா வந்த என கேட்க; அதற்கு வடிவேலுவோ இல்லை அண்ணே உங்கள்ட்டேர்ந்து இந்த வார்த்தையை கேட்குறது எவ்ளோ பெரிய விஷய்ம் என சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலை நடிகர் நாசர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











