Ajith - ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு அப்புறம் அஜித்தான் அதை செய்வாராம்.. பிரபு சொன்ன சீக்ரெட்
சென்னை: Ajith (அஜித்) ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பிறகு அஜித்தான் ஒரு விஷயத்தை செய்வார் என்று நடிகர் பிரபு தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். யாருடைய துணையும் இல்லாம் திறமையின் துணிவோடு வந்த அஜித் இன்று தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். இதுவரை 61 படங்களில் நடித்திருக்கும் அஜித் சரிக்கு பாதி தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முன்னேறி வந்தவர்.

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது அத்திரைப்படம். இதனையடுத்து அவர் தனது 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜர் பைஜானில் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அஜர் பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்து சென்னையில் ஷூட்டிங் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல பிரச்னைகள்: அஜித்தை பொறுத்தவரை அவரது கரியரில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தவர். குறிப்பாக ரேஸில் அதீத ஆர்வம் கொண்ட அவர் பல போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். தற்போது ரேஸிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டாலும் பைக் ரைடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில்கூட வளைகுடா நாடுகளில் தனது பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
முதுகில் பிரச்னை: அஜித்குமார் ரேஸில் ஆர்வமாக இருந்தபோது ஏகப்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அவருக்கு பல அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றிருக்கின்றன. எனவே அவரது முதுகிலும், உடம்பிலும் பல காயங்கள் உண்டு என்று பேசப்படுவதுண்டு. முக்கியமாக அவருக்கு முதுகு வலி கடுமையாக ஏற்படும் அதனால் ஷூட்டிங்கில் ரொம்பவே சிரமப்படுவார் என்று அவருடன் பணியாற்றியவர்களும் சொல்வதுண்டு.
அஜித்தான் அதை செய்வார்: இந்நிலையில் அஜித் செய்யும் ஒரு விஷயம் குறித்து நடிகர் பிரபு பேசியிருக்கிறார். அதாவது அஜித் எல்லோரிடமும் கண்ணியமாக நடந்துகொண்டு மரியாதையுடன் பேசுவாராம். குறிப்பாக அவரது வீட்டுக்கு சென்றால் அங்கிருந்து கிளம்பும்போது வந்தவருடன் கார் வரை சென்று வழியனுப்பி வைப்பாராம். இந்த செயலை திரையுலகில் உள்ளவர்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை தவிர்த்து அஜித் மட்டும்தான் செய்வார் என பிரபு குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











