Rajinikanth: செருப்பு என்றால் ரஜினிக்கு அந்த நடிகை நியாபகம் தான் வரும்போல! ராதிகா சொன்ன தரமான சம்பவம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 171வது படமான கூலி படத்தில் நடித்து வருகின்றார். இது மட்டும் இல்லாமல், தனது 172வது படமான ஜெயிலர் 2 படத்திலும் கமிட் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ள சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகின்றது. இப்படியான நிலையில் அவர் குறித்து நடிகை ராதிகா பழைய பேட்டி ஒன்றில் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். இதுமட்டும் இல்லாமல், ரஜினிகாந்த்தின் அடுத்த படமான, ஜெயிலர் 2 படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்திற்கும் அனிருத் இசை அமைக்கின்றார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு, பொங்கல் விடுமுறையில் வெளியானது.

raadhika sarathkumar raadhika sarathkumar throwback rajinikanth throwback rajinikanth

50 ஆண்டு கால அவரது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இன்றைக்கு அடைந்துள்ள இடத்தினை எட்டுவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார். இதுதொடர்பாக பல திரைப்பிரபலங்களே தெரிவித்துள்ளனர். மேலும் பல மேடைகளில் ரஜினிகாந்தே தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, நடிகை ராதிகா பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள விஷயம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

rajinikanth radhika throwback

செருப்பு: அதாவது இணையத்தில் உலா வரும் வீடியோவில், " நான் அதிகம் நடித்தது ரஜினிகாந்த் உடன் தான். நான் ரஜினிகாந்த்தை அதிகம் கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பேன். சினிமா தொடர்பான விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவருக்கு முன்னதாகவே நான் அந்த விழாவிற்குச் சென்றுவிட்டேன். நான் ரஜினியிடம், ' பெரிய ஸ்டார்தானே நீங்க எனக் கேட்டேன். அதற்கு அவர், சூப்பர் ஸ்டார்னு சொல்றாங்க என பதில் அளித்தார். அப்படினா எதுக்கு இந்த லப்பர் செருப்பைப் போட்டுக்கொண்டு விழாவுக்கு வந்தீங்க எனக் கேட்டேன். அதன் பின்னர்தான் அவர் லப்பர் செருப்பு அணிந்திருப்பதையே பார்த்தார்.

rajinikanth radhika throwback

ரஜினி - ராதிகா: அதிலிருந்து அவர் எங்கு போனாலும் காலில் செருப்பை சரியாக அணிந்துள்ளாரா என செக் செய்துவிடுவார். நானும் அதனைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். கோச்சடையான் படத்தின் படப்பிடிப்புக்காக நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். அங்கு ரஜினிகாந்த் ஷூ அணிந்திருந்தார். அதனைப் பார்த்த நான் ரஜினி ஷூ போட்டுருக்கீங்க எனக் கேட்டேன், அதற்கு அவர், கரெக்ட்டா போட்டு இருக்கேன் எனக் கூறினார் என ராதிகா சிரித்துக் கொண்டே கூறினார்.

rajinikanth radhika throwback

கமெண்ட்: இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும், சூப்பர் ஸ்டார் மானத்தையே இந்த ராதிகா வாங்கிவிட்டாங்களே என கிண்டலாக கமெண்ட அடித்து வருகின்றனர். அதேபோல் சிலர் ரஜினிகாந்த்திற்கு செருப்பு என்றால், ராதிகா தான் நினைவுக்கு வருவார் போல எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

rajinikanth radhika throwback

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X