Rajesh: மோசமான நிலையில் அந்த நடிகையைப் பார்த்த ராஜேஷ்.. மனதில் உடனே தோன்றிய விஷயம் என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் திரையுலகில் இன்று மிகவும் பரபரப்பாக வருத்ததுடன் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, மூத்த நடிகர் ராஜேஷின் மறைவு குறித்து தான். தனது 75 வது வயதில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மறைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் ராஜேஷ் ஒருமுறை நடிகை சாவித்ரியைச் சந்தித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அப்போது அவர் என்ன சொன்னார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை சாவித்ரி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா கண்ட மிகத் திறமையான நடிகை. வாழ்ந்தால் ஒரு நடிகை சாவித்ரி போல் வாழவேண்டும் என்று பெருமை மிகு உதாரணமாக இருக்கும் சாவித்ரியின் கடைசி காலங்களும் அவரது மரணமும் மிகப்பெரிய வருத்ததை பலருக்கும் ஏற்படுத்தியது. நடிகை சாவித்ரி குறித்து தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததுதான். அதே நேரத்தில் அவரது அந்த நிலைக்கு காரணம், சாவித்ரி எடுத்த பல தவறான முடிவுகள் என்றும் கூறப்படுகிறது.

Actor Rajesh Shares His Memories About Actress Savitri Throw Back

தவறான முடிவுகள்: அதாவது சாவித்ரி தனது நட்பு வட்டத்தில் இருந்து சில தவறான போதைப் பழக்கங்களை கற்றுக் கொண்டு அதற்கு அடிமையாகி விட்டார், அதேபோல் அவர் படங்களை தயாரிக்கிறேன் என தயாரிப்பில் பணம் செலவழித்தார், ஜெமினி கணேசனைத் திருமணம் செய்து கொண்டு நிம்மதி இல்லாத இல்லற வாழ்க்கையில் இருந்தார். அதாவது, போதைப் பழக்கத்தால் உடல் நலனை இழந்த சாவித்ரிக்கு அவரது தயாரிப்பில் வெளியான படங்கள் நஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்ததால், சொத்தையும் இழந்தார். அதேபோல் ஜெமினி கணேஷனைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு நிம்மதியான இல்லற வாழ்க்கையும் அமையவில்லை. இதனால் மன நிம்மதியையும் இழந்தார் சாவித்ரி.

சாவித்ரி வீடு: இப்படியான தருணத்தில் தான் சாவித்ரியை சென்று சந்தித்துள்ளார் நடிகர் ராஜேஷ். நடிகர் ராஜேஷ் இது தொடர்பாக பகிர்ந்து கொண்ட போது, " அந்த ஏழு நாட்கள் படத்தின் படப்பிடிப்பு சாவித்ரி அம்மாவின் வீட்டிற்கு அருகில் நடைபெற்று வந்தது. நான் அவரைச் சென்று சந்தித்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து அவரது வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டில், வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், உடனே ஜெமினி கணேஷனுக்கு போன் செய்து ஏதோ பேசினார். அவரும் என்னை உள்ளே செல்ல அனுமதி அளித்ததால், நான் சாவித்ரி அம்மாவைச் சென்று பார்த்தேன்.

Actor Rajesh Shares His Memories About Actress Savitri Throw Back

மோசமான நிலை: நான் வீட்டிற்குள் செல்லும் போது சாவித்ரி அம்மாவின் மகனைத்தான் முதலில் பார்த்தேன். மிகவும் சோகத்துடன் அவரது மகன் என்னைப் பார்த்தார். நானே சாவித்ரி அம்மாவின் அறைக்கு சென்று அவரைச் சந்தித்தேன். நான் அவரை அங்கு பார்த்ததை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. என் வாழ்வில் அதுபோன்ற துயரம் எதுவும் இதுவரை நடந்ததில்லை. கோடி ரூபாய் பணம் கொடுத்து அந்த அறையில் இருந்தது யார் என்று கண்டுபிடிக்க சொன்னால் கூட யாரும் அந்த அறையில் இருந்தார்கள் என்று கேட்டால் யாராலுமே அது சாவித்ரி அம்மா என்று கண்டுபிடிக்க முடியாது. நான் அவரைப் பார்த்ததும் எனது மனதில் தோன்றிய முதல் விஷயம், சாவித்ரி அம்மா ஜெமினி கணேசனை காதலித்திருக்க கூடாது என்பதுதான்" என்று வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X