ரவியை எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் படாதே.. ஆர்த்தியிடம் கெஞ்சிய ஜெயம் ரவியின் அம்மா!
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் பாடகி கெனீஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் கலந்து கொண்ட இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆர்த்தி இன்ஸ்டாகிராமில், அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், எனது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 18 ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்தவர். என்னை விட்டு விலகிச் சென்றது மட்டுமல்லாமல், பொறுப்புகளிலிருந்தும் விலகிச் சென்றுவிட்டார். நானும் எனது மகன்களும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறோம். என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதுடைய சின்ன குழந்தைகள், அவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகடிள புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்களால், தந்தையால் கைவிடப்பட்டதை உணர்ந்து கொள்ள முடியும் என்றார்.
இதைத்தொடர்ந்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உண்மையின்றி திரிக்கப்படுவது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. என்னைப்பற்றி, என் காயத்தை பற்றி அறியாதவர்கள் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கும்போது, நான் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். குழந்தைகளை பொதுவெளியில் நிதி ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றார். மேலும், தோழியாக எனக்கு அறிமுகமான கெனிஷா, தற்போது அழகான துணையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் என் மனைவியை மட்டுமே விட்டு பிரிகிறேன். குழந்தைகளை அல்ல என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

ரவி மோகன் தாய்: இப்படி சோஷியல் மீடியாவில் இவர்கள் இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், ரவி மோகனின் அம்மா, அப்பா கூட்டாகி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது ஆர்த்தியை நான் தனியாக அழைத்து சென்று சில விஷயங்களை பேசினேன். அதை நான் யாரிடமும் இதுவரை பகிர்ந்து கொண்டதே இல்லை. ரவி நடிகராக இருப்பதால் பல பெண்களுடன் இணைந்து நடிக்கும் சூழ்நிலை வரும். இதனால் எந்த சூழ்நிலையிலும், அவனை நீ சந்தேகப்படாதே, அவன் மிகவும் நல்ல பையன் என்றேன். தாய்க்குப் பின் தாரம் என்பார்கள், அதை நான் என் கண் முன்பே பார்தேன். ஆர்த்தி, ரவிக்கு தாயாக இருந்து அவரை நல்லபடியாக கவனித்துக் கொள்கிறாள். எங்களுடைய பொறுப்புகள் அனைத்தையும் ஆர்த்தி எடுத்துக் கொண்டாள். இன்று வரையிலும் ரவியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று கொண்டே இருக்கிறாள் ஆர்த்தி. இதைவிட பெற்றோருக்கு வேறு என்ன வேண்டும்.
மனதிற்கு சந்தோஷமா இருக்கு: எப்பொழுதுமே நாங்கள் ஆர்த்தியின் மாமனார், மாமியார் போல நடந்து கொண்டதே இல்லை. ஆர்த்தியின் அப்பா அம்மா போல தான் நாங்கள் அவர்களிடம் நடந்து கொள்கிறோம். ஆர்த்தியும் எங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையாக இருந்தாலும், எங்களை கவனித்துக் கொள்வதாக இருந்தாலும், அதை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறாள். இதைப்பார்க்கும்போது உண்மையில் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் ரவி மோகனின் அப்பா, அம்மா இருவரும் கூட்டாக பேசி இருந்தனர். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு மனைவிக்காக, ரவி மோகன் துரோகத்தை செய்து இருக்கிறார். இதை நீங்கள் கண்டிக்கக் கூடாதா என இணையவாசிகள் பலர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











