நடிகருக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சில்க் ஸ்மிதா.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.
இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.
தவம் இருந்த நடிகர்கள்: சில்க்குடன் நடித்துவிட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்களே தவம் இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. மேலும் விநியோகஸ்தர்களும் சில்க் ஆடும் பாடல் இருந்தால்தான் படத்தை வாங்குவோம் என்று கண்டிஷன் போட்ட கதையும் உண்டு. பீக்கில் இருந்தபோது சில்க் ஸ்மிதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் பம்பரமாய் சுழன்றவர் அவர். ஒருகட்டத்தில் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஊட்டிவிட்ட சில்க்: இந்நிலையில் நடிகருக்கு சில்க் ஸ்மிதா ஊட்டிவிட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. பாலசந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடித்த ரவிகாந்த் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு சில்க் ஸ்மிதா ரொம்ப க்ளோஸ். அதேபோல் ஊர்வசி, அர்ச்சனா கூடவும் ஒர்க் பண்ணியிர்க்கிறேன். இந்த மூன்று பேரும் என்னை கேட்காம எதுவுமே செய்யமாட்டார்கள். ஒருமுறை ஈரோட்டில் ஒரு கச்சேரி நடந்தது. அப்போ பிரபுதேவா, கிங்காங், நான், அமர் எல்லாம் சென்றோம். அது கங்கை அமரனின் கச்சேரி. சில்க்கும் என்னுடன் வந்தார்.
ஊட்டிவிட்டார்: ஒருமுறை நைட் டின்னர் சாப்பிட்டோம். அப்போது சில்க் ஸ்மிதா சாப்பாட்டை மிக்ஸ் பண்ணிட்டு இருந்தார். அப்போது என்னை டின்னருக்கு கூப்பிட்டு நீ மட்டும் சாப்பிடுகிறாய் என்று கேட்டேன். அப்போது உடனே அவர் எனக்கு அந்த சாப்பாட்டை ஊட்டிவிட்டார். ரொம்ப க்ளோஸாக இருந்தார் அவர். கிட்டத்தட்ட காதல் மாதிரி ஆகிடுச்சு" என்றார்.


Click it and Unblock the Notifications











