கவுண்டமணி சொல்லியும் கேட்காத இயக்குநர்.. நன்றி கெட்ட வடிவேலு.. இதை யார் சொன்னா தெரியுமா?

சென்னை: கவுண்டமனி, செந்தில் காம்பினேஷனில் பல படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த இயக்குநரின் படங்களில் வரும் காட்சிகளை போன்று இல்லாதது குறைதான். குறிப்பாக வடிவேலுவின் வளர்ச்சிக்கு இவர் இயக்கிய படங்கள் தான் அதிகம். அதையும் அந்த இயக்குநர் பாக்கியராஜ் இயக்கிய பட்ததை பார்த்து இதில் சின்ன மைனஸ் இருக்கிறது என்றே தெரிவித்திருக்கிறார். யார் அந்த இயக்குநர், அவர் எந்தெந்த படங்களை இயக்கியுள்ளார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்,

90களில் வெளியான காலம் மாறிப்போச்சு, கந்தா கடம்பா கதிர்வேலா, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பொங்கலோ பொங்கல், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குநர் வி.சேகர். இவர் ஆரம்பக் காலகட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக அரசு பணியில் இருந்திருக்கிறார். 80களில் பாக்கியராஜ் படங்களை பற்றி சொல்லவா வேண்டும். திரைக்கதைக்கு பெயர் போனவர். இந்திய திரையுலகமே அவரை பார்த்தி மிரண்டு போயிருந்தன.

பாக்யராஜ் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் முதல் சிவாஜி வரை இவரது படங்களுக்கு ரசிகர்கள் ஆகி போனார்கள். பாராதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்தாலும், தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். இவர் இயக்கிய சின்னவீடு படத்தை எடுத்து முடித்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பாக்கியராஜிற்கு ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் அவர் இயக்கும் படங்களை குறைந்தது 50 பேரிடம் போட்டு காண்பித்துவிட்டு அந்த படம் நன்றாக இருந்தால் அவரே ரிலீஸ் செய்வாரு இல்லைன்னா படத்தை வித்திடுவாரு. அதே பாணியில் சின்னவீடு படத்தை ஏவிஎம்மில் போட்டு காண்பித்தார்.

actor-vadivelus-betrayal-of-director-v-sekhar

அப்போது எஸ்.வி.சேகர் இயக்குநராக இல்லை. அரசு பணி ஊழியராக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரிடம் ஒருவர் வந்து சார் ஏவிஎம்மில் சின்னவீடு படம் போடுறாங்களாம். நீங்க பாக்க போறிங்களா என்று கேட்டதும் அவரும் சின்னவீடு படத்தை பார்க்க சென்றார். படம் முடிந்தது, படம் பார்க்க வந்த அனைவரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டி பேசினார்கள். ஆனால், எஸ்.வி.சேகர் மட்டும் படத்தில் சின்ன குறை இருக்கிறது. அவரிடம் படத்தில் குறை இருப்பதை கூற தயங்கினார்கள். ஆனால், எஸ்.வி.சேகர்

உங்களோட முந்தானை முடிச்ச, மௌனகீதங்கள் எல்லாம் அருமையான கதை. நல்ல படம். ஆனா இதுல ஒரு சின்ன மைனஸ் இருக்கு. பொண்ணோட கேரக்டர் சரியில்லன்னா ஹீரோ பிடிக்கலன்னு சொல்லலாம். ஆனா பெண் குண்டா இருக்கும் ஒரே காரணத்துக்காக வேணாம்னு சொல்லி இன்னொரு பெண்ணுடன் இருந்தால் அங்க நீங்களே வில்லனா மாறிடுவிங்க உங்களுக்கு இப்போ பெரிய இமேஜ் இருக்கு. அது மட்டும்தான் படத்துல ஒரு சின்ன மைனஸ் என்று கூறியிருக்கிறார். பாக்கியராஜ் அவரை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், இந்த படத்தை பார்த்த பெரிய பெரியை எழுத்தாளர்கள் இருக்காங்க.

அவர்கள் எல்லாருமே இந்த படத்தை பாராட்டி பேசிட்டாங்க. அதே மாதிரி வி.சேகரும் சொல்ல மறுத்துள்ளார். அதற்கு அவர், அது எப்படி சொல்ல முடியும். படத்தில் இருக்கும் குறையைத்தான் கேட்டார். அதைத்தான் சொல்லிட்டு வந்தேன் என்னால் அப்படி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு வேளை படம் பெயிலர் ஆனால் உங்களை வைத்து தான் படத்தை போட்டு காண்பித்தேன். நல்லா இருக்குன்னு சொன்னீங்க படம் ஓடல திட்டுவார். மைனஸ் இருக்குன்னு சொன்னதில் தப்பில்லை என வி.சேகர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் இவர் குடியிருப்போர் சங்க தலைவராக இருந்திருக்கிறார். பின்பு ஒரு நாள் பாக்கியராஜ் சார் வி. சேகரை அழைத்துள்ளார். அவரும் பார்க்க சென்றார்.

actor-vadivelus-betrayal-of-director-v-sekhar

சின்னவீடு படத்தில் ஒரு குறைன்னு சொன்னீங்க, அதை இப்போ சொல்லுங்க என்று கேட்டார். அப்போது அவரிடம் பார்த்திபன், பாண்டியராஜ் உள்பட பலர் அசிஸ்டண்ட்ஸ். ரைட்டர்ஸ் எல்லாம் இருந்தாங்க. வி.சேகரும் படத்தில் இருக்கும் குறையை கூறியிருக்கிறார். அப்போது, நீங்க சொல்றது சரியான பாய்ண்ட். ஆனால், இங்க இருக்குறவங்க பயந்துகிட்டு சொல்ல மாட்டாங்க என பாக்கியராஜ் தெரிவித்திருக்கிறார். வி.சேகரின் கருத்து சரியாக இருந்ததால் சின்னவீடு படத்தை ரிலீஸ் செய்யாமல் வித்துவிட்டார்.

பிறகு என்னை இங்கயே வேலைக்கு வந்துடுங்கன்னு பாக்கியராஜ் கூறியிருக்கிறார். அப்போது, இல்ல சார் எனக்கு கவர்மண்ட் வேலை. புரொமோஷன், பென்ஷன்லாம் வரும்னு சொன்னேன். சினிமா வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம்னு சொல்லி கூப்பிடுறாரு. அப்புறம் எனக்கு செக்யூரிட்டி தான் முக்கியம். என்னை நம்பி குடும்பம், குழந்தை எல்லாம் இருக்கு. அதனால 6 மாசம் லீவு போட்டுட்டு வந்து இங்க சேர்ந்துக்கறேன்னு வி.சேகர் கூறியுள்ளார்.

அதன் பிறகு பார்த்திபன், பாண்டியராஜ் போன்று வி.சேகரும் குடும்ப பாங்கான படங்களை இயக்கி வெற்றி பெற்றார். இவர் இயக்கும் படங்களில் எப்போதும் வடிவேலு இல்லாமல் கதை எழுதமாட்டாரு. குறிப்பாக கவுண்டமணியும் இருப்பார். சமீபத்தில் வி.சேகர் அளித்த பேட்டியில் வடிவேலு பற்றி கவுண்டமணி கூறியதை நினைவுப்படுத்தினார். வடிவேலு செய்யும் ஒவ்வொன்றிற்கும் கவுண்டமணி இங்கே பாரு சேகர் நீ அவனை நம்பாதே அவன் ஜெகதால கில்லாடி, இந்த மாதிரி நா பலபேரை பார்த்திருக்கிறேன். ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் கப்பலை கவுத்து விடுவான். சொன்னா கேளுன்னு எச்சரித்தார்.

நானும் அப்படி எல்லாம் இருக்காது அண்ணன் விடுங்க பாத்துக்கலாம் என்றே தெரிவித்தேன். ஆனால், வடிவேலு என் படங்களில் நடித்தபிறகு மார்க்கெட் ஏறுது. ரொம்ப பிஸியா மாறிட்டாப்ல... சரி நான் அவரை வைத்து ஒரு படம் பண்ணலாம் நினைக்கிறப்போ கால்ஷீட் தரலை ரொம்ப வருத்தமா இருந்தது. அப்போ அண்ணன் கவுண்டமனி சொன்னது தான் நியாபகம் வந்தது. இந்த மாதிரி ஊர் பசங்கள கூட்டி வந்து வளர்த்து விடாத அவங்க வேலையை காட்டிடுவாங்கனு சொன்னாரு. நா கேட்கலை என வி.சேகர் சிரித்துக் கொண்டே கூறினார்.

actor-vadivelus-betrayal-of-director-v-sekhar

இதே மாதிரி ஒருநாள் புது கார் வாங்கிய வடிவேலு பண்ண அலப்பறைகளையும் வி.சேகர் தெரிவித்தார். அப்போது கவுண்டமணி செந்தில் படப்பிடிப்பில் இருந்தனர். வடிவேலு புது கார் வாங்கி வந்து எனக்கு காட்டிவிட்டு அண்ணன் வந்து உட்காருங்க உங்களை வச்சு ஒரு ரவுண்ட் போகனும். சொன்னாரு. வேணாம்பா சொன்னாலும் கேட்காம ஏறி உட்கார வைத்து ஒரு ரவுண்ட் அடித்து அப்படியே கவுண்டமணி, செந்தில் கார் முன்னாடி மோதுற மாதிரியே கொண்டாந்து நிப்பாட்டுனான். எனக்கு பயமே வந்துவிட்டது. அதை பார்த்த கவுண்டமனி டிரைவர் அவர்கிட்ட போய் சொல்லியிருக்காரு. அப்ப கவுண்டமனி அண்ணன் என்ன சேகரு நா சொன்னது நடந்துதா.. நீ பட்டாதான் புரியும் என சொல்லிவிட்டு சென்றார். வடிவேலு நன்றி கெட்டவர் என்பதை வாயால் சொல்லாமல் சிரிப்பால் சொல்லி முடித்தார் வி.சேகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X