விடிய விடிய சரக்கு.. ரஜினி என்ன செஞ்சாரு தெரியுமா?.. ஆத்தாடி வேற மாதிரி இருந்திருக்காரே ப்பா

சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கும் அவர்; அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த இரண்டு படங்களுமே அவரது கரியரில் மைல் ஸ்டோனாக இருக்கும் என்ற நம்பிக்கையும் அவரது ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் படிக்காதவன் பட சமயத்தில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

ரஜினிகாந்த் என்றாலே அனைத்து தலைமுறையினர்களும் ரசிப்பார்கள். அவரது நடை, உடை, பாவனை, டயலாக் பேசும் விதம் என அத்தனையையும் ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியிலிருந்து இத்தனை வருடங்களாக கீழே இறங்காமல் இருக்கிறார். அதேபோல் அவரது வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக அவரது எளிமையையும் பலர் சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி என்றாலே எளிமை: உதாரணமாக எந்திரன் திரைப்பட ஷூட்டிங்கிற்கு செல்ல தாமதம் ஆனதால் உடனடியாக ஒரு போக்குவரத்து காவலரோடு இரு சக்கர வாகனத்தில் ரஜினி சென்ற சம்பவம் எல்லாம் உண்டு. அதுமட்டுமின்றி தன்னுடைய வீட்டுக்கு யார் வந்தாலும் அவரை வாசல்வரை வந்து வரவேற்பதும், அவர்கள் கிளம்பும்போது வாசல்வரை சென்று அனுப்பிவைப்பதும் என அவ்வளவு எளிமையாக இருப்பாராம். அவரது எளிமைக்காகவும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Actor Vijay Babu has spoken about Rajinikanth s drinking habit
Photo Credit:

இப்போதும் பிஸி: 60 வயதை கடந்தாலே பலர் உற்சாகத்தை இழந்துவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த்தோ அப்படி இல்லை. 70 வயதை கடந்த பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்த அவர் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இரண்டு படங்கள் மீதும் அவரது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

ரஜினியின் குடி பழக்கம்: இதற்கிடையே ரஜினிகாந்த் தான் வளர்ந்த காலத்தில் குடி பழக்கத்தை கொண்டிருந்தார். மாலை ஆகிவிட்டால் குடிக்க் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவரும் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அவரே சில பேட்டிகளில் ஓபனாக ஒத்துக்கொள்ளவும் செய்திருக்கிறார். இந்நிலையில் படிக்காதவன் பட சமயத்தில் நடந்த சம்பவம் குறித்து அப்படத்தில் ரஜினிக்கு சகோதரராக நடித்த விஜய் பாபு ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

விஜய் பாபு பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு சகோதரராக நான் நடித்தேன். அப்படத்தின் இயக்குநர் ராஜசேகரும், நானும் சினிமா கல்லூரியில் படித்ததிலிருந்து பழக்கம். படிக்காதவன் ஷூட்டிங் போரூரில் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஜெய்சங்கர் மதியம் இரண்டு மணிக்குத்தான் வருவார். ரஜினியோ காலை 7.30 மணிக்கே வந்துவிடுவார். ஒருமுறை அப்படி வந்த ஜெய்சங்கர் இயக்குநரிடம் ரஜினியை பார்த்து, 'இவன் எத்தனை மணிக்கு வந்தான்' என்று கேட்டார்.

அதற்கு ராஜசேகரனோ, காலை 7.30 மணிக்கே வந்துவிட்டார் என சொல்ல; ஷாக்கான ஜெய்சங்கரோ, நானும் ரஜினியும் காலை 5.30 மணிவரை குடித்தோம். நான் மதியம் வருகிறேன். இவர் எப்படி காலையிலேயே வந்தார் என்று சொன்னார். ரஜினி ஒன்றும் சொல்லாமல் சிறு புன்னகையோடு சாப்பிட்டுக்கொண்டார். தனிப்பட்ட ரீதியில் ரஜினி என்ன செய்தாலும் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வந்துவிடுவார். அதனால்தான் அவர் இவ்வளவு உயரத்துக்கு சென்றிருக்கிறார்" என்றர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X