விஜய் விவாகரத்து.. அன்றே கணித்த நெப்போலியன்.. அப்போவே கரெக்ட்டா சொல்லிருக்காரே ப்பா
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகாரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அவரது இந்த முடிவு விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதற்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என அலசி ஆராய தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் அரசியல் களத்தில் விஜய்க்கு எதிர் தரப்பில் இருப்பவர்களும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
நடிகர் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதை தவெகவினரும், விஜய்யின் ரசிகர்களும் திட்டவட்டமாக மறுத்துவந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் பூகம்பத்தையே ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.

மனுவில் இருந்தது என்ன?: அந்த மனுவில் அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் மனதளவில் என்னை பிரிந்து வாழ்ந்தார்.நடிகையுடன் அவர் உறவில் இருந்ததால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நடிகையுடன் உறவை முறித்துக்கொள்வதாக உறுதி கொடுத்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம். சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். அந்தப் புகைப்படங்களை நடிகையே பகிர்ந்திருந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.
நடிகையின் பெயரை சொல்வேன்: நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும், எனது கணவருக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்குவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன். கடந்த இரண்டு வருடங்களாக விஜய்யை பிரிந்து வாழ்கிறேன். எனவே விவாகரத்து வேண்டும். விஜய் திருமணத்தில் மீறிய உறவில் இருந்தார். அதனை தட்டிக்கேட்டதால் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். மேலும் செலவுக்குகூட பணம் தரவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
ட்ரெண்டாகும் நெப்போலியன் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து நெப்போலியன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "விஜய் அவருடைய தாய், தந்தையை பக்கத்தில் சேர்க்கவில்லை. அவரது மனைவியை பக்கத்தில் சேர்க்கவில்லை. மகன், மகளை பக்கத்தில் சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கிறதா சினிமாவில்தானே நீங்கள் இருக்கிறீர்கள் என எல்லோரும் என்னை கேட்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்தால் சொந்த குடும்பத்தையே கவனிக்காதவர் எப்படி மக்களை கவனிப்பார் என்ற கேள்வி வரும்தானே" என்றிருந்தார்.
விஜய்யுடன் பிரச்னை: அதனைப் பார்த்த நெட்டிசன்கள் நெப்போலியன் அப்போதே கணித்திருக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக, போக்கிரி படத்தில் நடித்தபோது விஜய்க்கும், நெப்போலியனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போதிருந்து விஜய்யுடன் பேச்சை நிறுத்தியதோடு மட்டுமின்றி சேர்ந்து நடிப்பதையும் நெப்போலியன் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















