Vijay - பொறுமையா இரு.. வாய்ப்பு வரும்.. என் மகனிடமும் சொல்லிருக்கேன்.. நடிகருக்கு அட்வைஸ் செய்த விஜய்

சென்னை: Vijay (விஜய்) நடிகர் அருண் விஜய்க்கு நடிகர் விஜய் அட்வைஸ் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர் விஜய். அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் டாப்பில் இருக்கிறார் அவர். ஹிந்திக்கு சென்று நடிக்காவிட்டாலும் இங்கிருந்தபடியே இந்தியா முழுவதும் பிரபலமான வெகு சில நடிகர்களில் விஜய்யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவரது படங்கள் அனைத்தும் அசால்ட்டாக நூறு கோடி க்ளப்பில் இணைபவை.

Actor Vijay Gave Advice to Actor Arun Vijay Here is the Full details

லியோ: விஜய்யின் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக இந்தப் படமும் 100 கோடி ரூபாயை வசூலில் தாண்டிவிட்டதாகவும் ஜெயிலரை முந்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 68: லியோ படத்துக்கு பிறகு விஜய் இப்போது தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதனை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், வைபவ், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்காக அவருக்கு 150 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார்: முக்கியமாக விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுக்க இரண்டு தரப்புக்குமிடையே இணையத்தில் மோதல் உருவானது. இதற்கு விஜய்யும் முற்றுப்புள்ளி வைத்தார். அதேசமயம் ரஜினியை பார்த்து நடிக்க வந்த விஜய் தற்போது அவரது இடத்தை நெருங்கிவிட்டது என்பது உண்மையில் அபார வளர்ச்சிதான் என்கின்றனர் ரசிகர்களில் சிலர்.

அருண் விஜய்க்கு அட்வைஸ்: இப்படி உயர்ந்த இடத்தில் இருக்கும் விஜய் சக நடிகர்கள் மீதும் அக்கறை செலுத்துபவர். அந்தவகையில் அவர் அருண் விஜய்க்கு அட்வைஸ் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி தயாரிப்பாளராகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் அருண் விஜய்.

அதனையடுத்து விஜய்யின் கால்ஷீட்டை கேட்டு அவரை அணுகினாராம். ஆனால் விஜய்யோ, நீ என்னைவிட திறமையான நடிகன். என் மகனிடமும் அடிக்கடி அதை சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு. கண்டிப்பாக உனக்கான வாய்ப்புகளும், வெற்றியும் கிடைக்கும் என்றாராம். இந்த விஷயத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X