ஸ்டைலா பண்ணா பில்லா.. மாஸா பண்ணா பாஷா.. ரஜினி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் ரசிகர்களால் மட்டுமில்லாமல் சக நடிகர்களால் விரும்பப்படுபவர். சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

நடிப்பை தாண்டி ரஜினியின் ஸ்டைல், தனிப்பட்ட வாழ்க்கைமுறை உள்ளிட்டவை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

நடிகர் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தின் ரசிகர்களாக காணப்படுகின்றனர். ரஜினியை பார்த்து இம்ப்ரஸ் ஆகி திரைத்துறைக்கு நடிக்க வந்தவர்கள் பலர் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் கொண்டுள்ளவர். தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பால் ஏராளமானவர்களை கவர்ந்தவர். ஆனாலும் ரஜினியின் ஸ்டைல்தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடைபோட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சர்வதேச ரசிகர்கள்

சர்வதேச ரசிகர்கள்

சர்வதேச அளவில் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் நடிகர்களுக்கும் இவர் பேவரைட்டாக காணப்படுகிறார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். இதற்காக தன்னுடைய கெட்டப்பையும் அவர் மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய 170வது படத்தில் ஞானவேல் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அவர் ரிடையர்ட் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெய்பீம் போன்ற அதிரடியான கதையை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளது பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் ரஜினி, அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கமிட்டாகி வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் ரஜினி

பொது நிகழ்ச்சிகளில் ரஜினி

சினிமாவில் பரபரப்பாக நடித்துவருவதுடன் பொது நிகழ்ச்சிகளிலும் உற்சாகமாக கலந்துக் கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டில் கலந்துக் கொண்டு, பொன்னியின் செல்வன் நாவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மீனா 40 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு மீனா குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து அவரை உற்சாகப்படுத்தினார். மேலும் அவரது கணவர் இறப்பு குறித்தும் பேசி கண்கலங்கினார்.

ரஜினிக்கு விஜய் பாராட்டு

ரஜினிக்கு விஜய் பாராட்டு

இதனிடையே முன்னதாக கடந்த 2017ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி குறித்து பேசிய விஜய், ரஜினி சாருக்கு முரட்டுக் காளை போல மசாலா படங்களில் இறங்கி அடிக்கவும் தெரியும், முள்ளும் மலரும் படம் போல மனதை கலங்கடிக்கவும் தெரியும் என்று குறிப்பிட்டார். ஒரே கேரக்டராக இருக்கும் ரஜினி, ஸ்டைலா பண்ணா பில்லா, மாஸா பண்ணா பாஷா, அதுவே கொஞ்சம் கிளாஸா பண்ணா கபாலி என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.

மூன்று பரிணாமத்தில் டான்

மூன்று பரிணாமத்தில் டான்

தொடர்ந்து பேசிய விஜய் காலா படத்தின்மூலம் மூன்று பரிணாமத்தில் டான் கேரக்டரை நம் கண் முன்னால் கொண்டுவந்தது ரஜினி சார் மட்டும்தான் என்றும் பாராட்டினார். ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி திரையுலகில் முன்னேறிய நடிகர்கள் பலர் திரைத்துறையில் உள்ளனர். அவர்களில் விஜய்யும் ஒருவர். ரஜினியின் சாயல் பல நடிகர்களிடம் காணப்படும் நிலையில், விஜய்யும் அதிலிருந்து தப்பவில்லை. அவருக்கும் ரஜினியின் நடிப்புச்சாயல் இருப்பதை தவிர்க்கமுடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X