இன்றைய போராட்டம்.. நாளைய வெற்றி..ரசிகர்களுக்கு வாழும் வழி சொன்ன விஜய்!
சென்னை : நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களை சரியான இடைவெளிகளில் தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 50 நாட்களாக காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடத்தப்பட்டது. தற்போது சென்னை திரும்பியுள்ள படக்குழு, விரைவில் சென்னையில் சூட்டிங்கை துவங்கவுள்ளனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய், எப்போதும் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்தரமாக தமிழில் சில படங்களில் நடித்துள்ள விஜய், நாளைய தீர்ப்பு என்ற படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். துவக்கத்தில் விஜய்யின் எண்ணெய் படிந்த முகம் உள்ளிட்டவை ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. அதிகமான விமர்சனங்களை சந்தித்த விஜய், அதிலிருந்து தனக்கான பாடத்தை கற்றுக் கொண்டு, தற்போது ஏராளமான ரசிகர்களின் இதயத்துடிப்பாக மாறியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து பீஸ்ட், வாரிசு என அடுத்தடுத்த படங்கள் விஜய்க்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்துள்ளன. ஆயினும் இந்தப் படங்கள் வசூல்ரீதியாக மிரட்டியுள்ளன. தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்துவந்த விஜய் வாரிசு படத்தில் வம்சி இயக்கத்தில் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்ட கதையில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து படத்தில் சரத்குமார், ஷாம், ஜெயசுதா உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

லியோ படத்தின் சூட்டிங்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய 67வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் விஜய். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா, விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். மேலும் படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் கடந்த 50 நாட்களாக காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்று முடிந்துள்ளது.

காஷ்மீர் சூட்டிங் நிறைவு
தற்போது காஷ்மீர் சூட்டிங்கை முடித்துக்கொண்டு லியோ படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சில தினங்களில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யின் கெட்டப், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

விஜய்யின் பழைய வீடியோ
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சிரமங்கள், கேலிகள், கிண்டல்கள், அவமானங்கள் ஆகியவை இருக்கத்தான் செய்யும் என்று தன்னுடைய ரசிகர்களிடையே பேசிய விஜய் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கெல்லாம் ஃபீல் செய்யாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய ரசிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய போராட்டம்.. நாளைய வெற்றி
தொடர்ந்து பேசிய விஜய், இன்றைய போராட்டம் நாளைய வெற்றி என்றும் கூறியுள்ளார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் தன்னை நிரூபிக்க பல்வேறு போராட்டங்களை விஜய் சந்திக்க வேண்டியிருந்தது. தன்னுடைய முகம், உடலமைப்பு, நடிப்பு போன்றவற்றை சிறப்பாக்கவும் அவர் கடுமையான போராட்டத்தை சந்தித்தார். கரடுமுரடான பாதையில் நடைபோட்டார். இந்நிலையில் தற்போது ரசிகர்கள் போற்றும் தளபதியாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இந்த போராட்டமே அவரை இப்படி பேச வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











