Vijay - அதெல்லாம் தலைவலியான வேலைங்க.. என்ன மகன் வேலையை விஜய் இப்படி சொல்லிட்டாரு

சென்னை: Vijay (விஜய்) விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ரிசல்ட்டுமே விஜய்க்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதன் காரணமாக அவரும் அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்தான். எனவே லியோ படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார்கள்.

Actor Vijay Talks about Direction in Cinema

ஷூட்டிங் ஓவர்: படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. எஞ்ச்யிருந்த பேட்ச் ஒர்க்கையும் லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டார். இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கவிருக்கின்றன. விஜய் விரைவில் இந்தியா திரும்பி டப்பிங்கையும் கொடுக்கவிருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் படம் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் 68: லியோ படத்துக்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அமெரிக்காவில் 3டியில் விஜய்யின் முழு உடம்பையும் ஸ்கேன் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு வெல்கம் டூ எதிர்காலம் என குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக அந்தப் படம் டைம் ட்ராவலாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வேறு ஒருவர் ஹாட் டாபிக்: இப்படி விஜய் ஹாட் டாபிக்காக இருந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரைத் தாண்டி சில நாட்களுக்கு முன்பு இன்னொருவர் ஹாட் டாபிக்காக மாறினார். அவர்தான் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். கனடா, லண்டனில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கவிருக்கிறார். படம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் இயக்கம் குறித்து விஜய் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Actor Vijay Talks about Direction in Cinema

என்ன பேசினார்?: அதாவது திருப்பாச்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து பேட்டியளித்த விஜய், "எனக்கும் இயக்கத்தின் மேல் ஆசை இருக்கிறதுதான். ஆசை மட்டும்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான எந்த முன் ஏற்பாடையும் நான் செய்யவில்லை. எனது படத்தை நானே இயக்கி அதில் நானே நடிக்க வேண்டும். ஆனால் அதெல்லாம் தலை வலியான வேலை.

என்னுடைய இயற்கையான குணத்துக்கு இந்த டென்ஷன், பிரஷர் எல்லாம் செட்டே ஆகாது. கூலாக, ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். தெரியவில்லை எதிர்காலத்தில் படம் இயக்கினாலும் இயக்குவேன்" என்றார். அவர் சொன்னபடியே விஜய் இயக்குநராகவில்லை அவரது மகன் தற்போது இயக்குநராகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X