Vijay: கடவுள் முன்னாடி மண்டி போட்டா.. ரசிகர்களுக்கு விஜய் சொன்ன விஷயம் இதுதான்!
சென்னை: நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக தமிழில் அறிமுகமானவர். தற்போது முன்னணி நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
சர்வதேச அளவில் மாஸான ரசிகர்களை கொண்டவராக விஜய் காணப்படுகிறார். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்சாதனை புரிய தவறுவதில்லை.
இவரது படங்களின் ரிலீசை காட்டிலும் இசை வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே தூண்டி வருகிறது. அடுத்ததாக லியோ படத்தின் இசை வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவிவரும் விஜய்யின் த்ரோபேக் வீடியோ: நடிகர் விஜய் தன்னுடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் சிறுவனாகவே நடித்துள்ளார். இவர் ஹீரோவாக தமிழில் என்ட்ரி கொடுத்தப்படம் நாளைய தீர்ப்பு. இந்தப் படத்தை தொடர்ந்து கல்லூரி மாணவனாக சில படங்களில் நடித்திருந்தார் விஜய். அப்போது அவர் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்ற கோணத்தில் இவர் அதிகமான விமர்சனங்களை சந்தித்துள்ளார்.
ஆனால் இந்த தடைக்கற்களை தனக்கான படிக்கற்களாக மாற்றிக் கொண்டார் விஜய். எந்த முகத்தை பார்த்து மற்றவர்கள் விமர்சனம் செய்தார்களோ, அந்த முகத்தை பார்ப்பதற்காக தற்போது ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கும் சூழலை தன்னுடைய கேரியரில் ஏற்படுத்தியுள்ளார் விஜய். இவரது அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல்ரீதியாக மாஸ் காட்டி வருகின்றன.
விஜய் படங்களின் ரிலீசுக்கு இணையான வரவேற்பை அவரது படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளும் பெற்று வருகின்றன. அவரது படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு சிறப்பாக அமையும். ஒவ்வொரு முறையும் குட்டிக் கதைகளுடன் தன்னுடைய பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய். இந்த பேச்சின்போது, தன்னுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுப்பதையும் விஜய் தொடர்ந்து வருகிறார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள விஜய்யின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பேச்சின்போது, ஆரம்ப காலகட்டங்களில் தன்மீதான விமர்சனங்களை தான் தடை கற்களாக நினைத்திருந்தால் தற்போது ரசிகர்கள் முன்னால் நின்று பேசிக்கொண்டிருக்க முடியாது என்று விஜய் கூறியுள்ளார். தன்னுடைய வெற்றிக்கு பின்னால் அவமானங்களே அதிகமாக உள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
பின்னாடி நின்று பேசுபவர்கள் குறித்து கவலை கொள்ளாமல், அவர்களை காட்டிலும் நாம் இரண்டடி முன்னால் இருப்பதை நினைத்து பெருமைப்பட்டு செல்ல வேண்டும் என்று கூறிய விஜய், கடவுள் முன்பு மண்டியிட்டால் யார் முன்பும் எழுந்து நிற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். நமக்குதான் எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என்றும் நமக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் மற்றவர்கள்தான் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் இந்தப் பேச்சின்போது பேசியுள்ளார்.
அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் முடிந்தவரை அனைவரையும் சந்தோஷப்படுத்தி வாழ வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார். இந்த வாழ்க்கையையே தனக்கு தொழிலாக கொடுத்த கடவுளுக்கும் அதற்கு அஸ்திவாரமாக இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட விஜய், உண்மையாக ஒருவரை வெறுக்கத் தெரியும் என்றும் பொய்யாக ஒருவரை நேசிக்கத் தெரியாது என்றும் கூறி அந்த உரையை முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











