பிதாமகன் நினைவுகளை பகிர்ந்த விக்ரம்.. அப்பவும் எப்பவும் சியான் க்யூட்தான்!

சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளது.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார் விக்ரம்.

கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் அவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் சிறப்பாக கைக்கொடுத்தது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். முன்னதாக சில காதல் படங்களில் நடித்திருந்தாலும் சேது படமே சியான் என்ற சிறப்பான கலைஞனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் ரசிகர்களை மிரள வைத்தவர் விக்ரம்.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

அதையடுத்து எல்லாமே அவருக்கு சிறப்பான பயணங்களாகவே அமைந்து வருகின்றன. தன்னுடைய கேரக்டருக்காக அதன் சிறப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவராகவே விக்ரம் காணப்படுகிறார். ஐ படத்தில் இவரது கெட்டப் மாற்றங்கள் எல்லாம் ஜஸ்ட் லைக் தட் ரகங்கள் இல்லை.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தன. இதில் கோப்ரா படத்தில் கெட்டப்புகளுக்கு அதிகமான கவனத்தை விக்ரம் கொடுத்திருந்தார். இதேபோல மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரமின் மெனக்கெடல் அதிகமாகவே காணப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 படம்

பொன்னியின் செல்வன் 2 படம்

தற்போது அவரது நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் பீரியட் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

ட்விட்டர் பதிவு

ட்விட்டர் பதிவு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் இணைந்த விக்ரம், தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பழைய நினைவுகளை சொல்லும் வகையில் பிதாமகன் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். த்ரோபேக் சண்டே என்றும் தன்னுடைய பதிவிற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார் விக்ரம்.

பிதாமகன் படத்தின் புகைப்படம்

பிதாமகன் படத்தின் புகைப்படம்

பிதாமகன் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுவார் விக்ரம். பரதேசி கோலத்தில் இருப்பார். ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஹேர்ஸ்டைல் மட்டுமே அதை நினைவுப்படுத்துகிறது. மாறாக புகைப்படத்தில் மிகவும் ஸ்மார்ட்டாக, தனக்கே உரிய ஸ்டைலில் காணப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X