Vetrimaaran - கெட்ட வார்த்தை பேச சொன்னார் வெற்றிமாறன்.. சீக்ரெட் உடைத்த நடிகை

சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) தனது படத்தில் நடிக்க கெட்ட வார்த்தை பேச சொல்லி நடிகையை வெற்றிமாறன் செலக்ட் செய்திருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சினிமாவின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர். அதனால்தான் முதல் படத்தில் எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென்று முதல் படத்தை கமர்ஷியலாக எடுத்தார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் தனுஷின் கரியரில் சிறந்த படங்களில் ஒன்றாக பொல்லாதவனும் இருக்கிறது.

Actress Aishwarya Rajesh Shares her Memories about Vadachennai And Vetrimaaran

ஆடுகளம்: பொல்லாதவன் படத்துக்கு பிறகு ஆடுகளம் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். முழுக்க முழுக்க மதுரையை பேக் ட்ராப்பாக வைத்து சேவல் சண்டைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளி வந்தது. இந்தப் படம்தான் வெற்றிமாறனின் க்ராஃப்பை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனையடுத்து இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குநராக மாறினார் வெற்றி.

நாயகனைவிட கதைதான் முக்கியம்: இரண்டு படங்கள் வெற்றி பெற்றுவிட்டாலே முன்னணி ஹீரோவோடு பணியாற்ற வேண்டுமென்பதுதான் இயக்குநர்களின் ஆவலாக இருக்கிறது. ஆனால் வெற்றிமாறன் அப்படி இல்லை. கதை யாரை கேட்கிறதோ அவரை நோக்கிதான் செல்வார். அப்படித்தான் ஆடுகளத்தை முடித்துவிட்டு விசாரணை படத்தை இயக்கினார். விசாரணை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து காவல் துறையினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. தொடர்ந்து அவர் இயக்கிய வடசென்னை, அசுரன் படங்களும் ஹிட்டாகின. சமீபத்தில் விடுதலை படத்தையும் அவர் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்.

Actress Aishwarya Rajesh Shares her Memories about Vadachennai And Vetrimaaran

வடசென்னை சந்தித்த சர்ச்சை: வெற்றிமாறன் இயக்கிய படங்களில் அவரது கரியர் பெஸ்ட் என பேசப்படுவது வடசென்னை. அதில் ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார் என ரசிகர்கள் கூறுவதுண்டு. அதேசமயம் வடசென்னைவாசிகளை தரம் தாழ்ந்து வெற்றிமாறன் காட்சிப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதற்கு வடசென்னை என்று பெயர் வைக்கக்கூடாது என வடசென்னையை சேர்ந்த சிலர் சமீபத்தில்கூட கூறினர்.

கவனம் ஈர்த்த பத்மா: வடசென்னை படத்தில் நடித்த அனைவருமே கவனம் ஈர்த்தாலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூடுதல் கவனம் ஈர்த்தார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் தியேட்டரில் பலரால் ரசிக்கப்பட்டது. மேலும் அவர் சில கெட்ட வார்த்தைகள் பேசியதும் படம் வெளியானபோது சென்சேஷனல் ஆனது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஆடிஷன்போது கெட்ட வார்த்தை பேச சொல்லி அதை வைத்து ஐஸ்வர்யாவை செலக்ட் செய்திருக்கிறார் வெற்றிமாறன்.

Actress Aishwarya Rajesh Shares her Memories about Vadachennai And Vetrimaaran

கெட்ட வார்த்தை பேசும்மா: அதாவது வடசென்னை படத்தின் ஆடிஷனில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் வெற்றிமாறன், ஐஸ்வர்யா உங்களுக்கு என்னவெல்லாம் கெட்ட வார்த்தை தெரியுமா அதை அப்படியே பேசுங்கள் என்றாராம். அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா என்ன சார் இது.. இப்படியெல்லாம் சொல்றீங்க என்று கேட்டாராம். அதற்கு வெற்றிமாறன், நீ பேசுமா என்றாராம். உடனடியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனக்கு தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பேசினாராம் ஐஸ்வர்யா.

எப்போமா பத்மா ஷூட்டிங்?: அதனை கேட்டுவிட்டு சிறுது நேரம் கழித்து, 'என்னம்மா பத்மா எப்போமா ஷூட்டிங் போவோம்' என்றாராம் வெற்றிமாறன். உடனே ஐஸ்வர்யா என்ன சார் சொல்றீங்க என கேட்டிருக்கிறார். ஆமாம் நீதான் இந்தப் படத்துக்கு ஹீரோயின் என்றாராம் வெற்றிமாறன். இந்தத் தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X