Director bala - முதலில் சுருட்டு அப்புறம் சிகரெட் - நடிகையை பாடாய் படுத்திய இயக்குநர் பாலா
சென்னை: Director Bala (இயக்குநர் பாலா) இயக்குநர் பாலா தனக்கு முதலில் சுருட்டு கொடுத்து பிறகு சிகரெட் கொடுத்ததாக ஒரு நடிகை கூறியிருக்கிறார்.
இயக்குநர் பாலா இந்திய அளவில் பிரபலமான இயக்குநர். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தின் டைட்டில் கார்டில் பாலாவுக்கும் க்ரெடிட் கொடுத்திருப்பார். பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இப்போது சியானாக வலம் வரும் விக்ரமும் சேது படத்தின் மூலம் ஹிட் கொடுத்து கோலிவுட்டில் நிலைக்க வைத்தவர்,

விளிம்பு நிலை மனிதர்களுக்கானவர்: முதல் படம் சேது மெகா ஹிட்டானாலும் பாலா அடுத்தடுத்து தொட்ட கதைக்களங்கள் வித்தியாசமானவை. தனது இரண்டாவது படமாக நந்தாவை இயக்கினார். அதுவரை ஈழத்து அகதிகளை பற்றி தமிழ் சினிமாவில் எந்த படைப்பாளியும் தொடாத சூழலில் பாலா அந்த விவகாரத்தை தொட்ட்டார். தொடர்ந்து, பிதாமகன் படத்தில் இடுகாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்த சமூகத்துக்குள் வந்தால் என்ன நடக்கும் என்று காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
நான் கடவுள் பாலா: பிதாமகனுக்கு அடுத்ததாக அவர் இயக்கிய நான் கடவுள் படம் வசூல் ரீதியாக அடிவாங்கினாலும் இன்றுவரை பலராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை தழுவி எடுத்தாலும் அந்தக் கதையில் பாலா தனது மேக்கிங் ஸ்டைலையே வைத்திருப்பார். குறிப்பாக, மரணம் என்பது வேண்டாம் என்று பலரும் யோசித்த சூழலில் மரணம் என்பது விடுதலை என்ற கருத்தை தைரியமாக, ஆழமாக பதித்திருந்தார் பாலா.
சரிவை சந்தித்த பாலா: அதன் பிறகு அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் தோல்வியை மட்டுமின்றி விமர்சனத்தை சந்தித்தன. அதேபோல் அர்ஜுன் ரெட்டியை விக்ரம் மகன் துருவ்வை வைத்து வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் பாலாவின் வெர்ஷன் கிடப்பில் போடப்பட்டது. இந்த சம்பவம் அடங்குவதற்குள்ளாகவே அவருக்கு விவாகரத்தும் நடந்தது.
பிரச்னையான வணங்கான்: திரை வாழ்க்கையில் வர்மா மூலம் விழுந்த அடி, தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து மூலம் விழுந்த அடி என இருந்த பாலாவுக்கு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் சூர்யா அதிலிருந்து வெளியேறினார். நந்தா, பிதாமகன் என சூர்யாவின் கரியர் பெஸ்ட் படங்களை கொடுத்த பாலாவுக்கா இந்த நிலைமை என கோலிவுட்டு கன்னத்தில் கை வைத்தது. ஆனால் எல்லா விஷயங்களுக்கும் அமைதியாக இருக்கும் பாலா இதிலும் அமைதி காத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.

நடிகர்களை அடையாளம் கண்டவர்: பல இளம் ஹீரோக்களுக்குள் நடிகன் இருக்கிறான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியவர் பாலா. அப்படி விஷாலுக்குள் நடிகன் இருக்கிறான் என்பதை உணர்த்திய படம்தான் அவன் இவன். தற்போது அந்தப் படத்தில் நடந்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது., படத்தில் விஷாலுக்கு தாயாக 80ஸ் பேவரைட் அம்பிகா நடித்திருப்பார்.
முதலில் சுருட்டு பிறகு சிகரெட்: படத்தில் சதாநேரமும் சிகரெட் புகைத்துக்கொண்டிருப்பார். அதுவரை அம்பிகாவை யாருமே அப்படி பார்த்தது இல்லை. முதலில் அம்பிகாவுக்கு பாலா சுருட்டை கொடுத்து புகைக்கும்படி சொன்னாராம். அதை வாயில் வைத்து இழுத்தவுடன் இருமல் வந்து மூக்கு வழியாக புகை வந்ததாம். இதனையடுத்து உதட்டில் வைத்து இழுக்கும்போது இனிப்பு சுவை கொடுக்கும் சிகரெட்டை கொடுத்து, இது சிங்கப்பூர் சிகரெட் இதை இழுங்கள் என்று கொடுத்தாராம்.
அதன் பிறகு அதை பழகி படம் முழுக்க புகைப்பிடிக்கும்படி நடித்தாராம். இருந்தாலும் தான் ஹீரோயினாக இருக்கும்போது இப்படி ஒரு கேரக்டர் தனக்கு வரவில்லையே என அவர் ரொம்பவே ஃபீல் செய்தாராம். இதனை அம்பிகா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











