சில்க் ஸ்மிதா மதுவெல்லாம் குடிக்கமாட்டார்.. போதையா இருக்க மாதிரி இருக்கும்.. சீக்ரெட் சொன்ன நடிகை

சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் சில்க் ஸ்மிதா பற்றி நடிகை அனுராதா பேசியிருக்கிறார்.

விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

throwback stories silk smitha

தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.

இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டு சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர்.

மூன்றாம் பிறை: அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.

அனுராதா பேட்டி: சூழல் இப்படி இருக்க அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் குறித்து பலரும் தங்களது யூகங்களை கூறுகிறார்கள். இந்நிலையில் நடிகை அனுராதா சில்க் பற்றி பேசுகையில், "பிணவறையில் சில்க்கை ஒரு மூலையில் கிடத்தியிருந்தார்கள். ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவளது உடலை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. அவளை அந்த மாதிரி பார்ப்பதற்கு என்னால் முடியவே இல்லை. சில்க் ட்ரக்ஸ் எடுத்தார்; மது குடித்தார் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் தலைக்கனம் பிடித்தவர் இல்லை. தலைக்கனம் பிடித்தவர் போல் நடிப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X