மாற்ற சொன்னார் நடக்கவில்லை.. விஜய் படத்தை அசால்ட்டாக தூக்கி எறிந்த ஜோதிகா - என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: விஜய்யின் படத்தில் தான் சொன்ன சில மாற்றங்கள் செய்யப்படாததால் அந்தப் படத்திலிருந்து ஜோதிகா வெளியேறியிருக்கிறார்.
வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.முதல் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் சோனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி நடிகையான ஜோதிகா
வாலி படத்துக்கு பிறகு வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் இருவரும் இணைந்த நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படமும் ஹிட்டாக தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜோதிகாவுக்கு குவிந்தன. 90களின் இறுதியிலும், 2000த்தின் ஆரம்பத்திலும் ஜோதிகா முன்னணி நடிகையாக மாறினார். அவருக்கு போட்டியாக சிம்ரனும் வர, சிம்ரன் - ஜோதிகா என்ற போட்டி உருவானது. இருவருமே சரிசமமாக ஹிட் படங்களை கொடுத்தனர்.

செம ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய ஜோதிகா
ஹீரோவுடன் டூயட், கிளாமர் என்ற ரூட்டில் மட்டும் பயணிக்காத ஜோதிகா சிறந்த கதையம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்தார். அப்படி அவர் நடித்த மொழி படம் அவரின் கேரியரில் முக்கியமான ஒன்று. வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் சந்திரமுகி படத்திலும் அவரது நடிப்பு அனைவரையும் மெர்சலாக்கியது.

நடிப்புக்கு ஓய்வு கொடுத்த ஜோதிகா
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து சூர்யாவும், ஜோதிகாவும் காதலிக்கத் தொடங்கினர். இரு வீட்டு சம்மதத்தையும் பெறுவதற்கு இரண்டு பேரும் பல வருடங்கள் காத்திருந்தனர். ஒருவழியாக வீட்டார் சம்மதம் கிடைத்தவுடன் கடந்த 2006ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார் ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு ரீ எண்ட்ரி
குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தார் ஜோதிகா. தனது இரண்டாவது இன்னிங்ஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்கலாம் என தீர்க்கமாக முடிவெடுத்த ஜோதிகாவுக்கு விஜய் பட வாய்ப்பும் கிடைத்தது.

விஜய் படத்தை மறுத்த ஜோதிகா
குஷி, திருமலை என மெகா ஹிட் படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ஜோதிகா. இதனையடுத்து அவரது இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜோதிகாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. அதாவது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜோதிகாதானாம். மெர்சலின் கதையை கேட்ட ஜோதிகா கதையில் சில விஷயங்களை மாற்ற சொன்னாராம். ஆனால் அதற்கு படக்குழு தயாராக இல்லையாம். எனவே இந்தப் படத்திலிருந்து விலகுகிறேன் என கூறிவிட்டு வெளியேறிவிட்டாராம்.
அதுமட்டுமின்றி மெர்சல் ஷூட்டிங்கில் ஜோதிகா இரண்டு நாள்கள் கலந்துகொண்டார். அவருக்கு அந்தக் கதையில் சில விஷயங்கள் சரியாக படாததால் இரண்டு நாள்கள் நடித்ததோடு வெளியேறிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் ஓடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











