பாருக்கு கூப்பிட்டாங்க.. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை கல்யாணி!
சென்னை : நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி, சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை மனம் திறந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை கல்யாணி, ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த இவர், தனது 15வது வயதில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சரியாக போகாததால், அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

நடிகை கல்யாணி
சினிமா, சீரியல் தொகுப்பாளினி என படு பிஸியாக இருந்த கல்யாணி 2014ம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. தற்போது சென்னையில் கணவருடன் செட்டிலாகி இருக்கும் கல்யாணி சினிமாவை விட்டு தான் விலகி சென்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

கதாநாயகியாக நடித்தேன்
அதில், நான் ஏழு வயது முதல் 26 வயது குழந்தை நட்சத்திரம் தொகுப்பாளினி என படு பிஸியாக இருந்தேன். எனக்கு 15 வயது இருக்கும் போது இரண்டு படத்தில் கதாநாயகியாக நடித்தேன். அப்போது என் பெயரை பூர்ணிமா என்று மாற்றிக்கொண்டேன். ஆனால், அந்த ரெண்டு படங்களும் சரியாக ஓடாததால், சில ஆண்டுகள் வீட்டில் இருந்தேன்.

பாருக்கு கூப்பிட்டாங்க
அப்போது தான் ஒருபெரிய சேனலில் இருந்து எனக்கு தொகுப்பாளினி வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு ஆங்கர் என்னை பாருக்கு வரீங்களா என கேட்டார். ஆனால் அப்போது முடியாது என்று சொல்லிவிட்டதால், அந்த சேனலில் இருந்து எனக்கு மீண்டும் அழைப்பு வரவே இல்லை. பெண்கள் தங்கள் கருத்தை தைரியமாக சொல்ல முன்வரும் போது மற்ற ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், அப்போது எனக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க
அதேபோல,நான் ஹீரோயினாக நடித்த போது, அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றீங்களா என்று என் அம்மாவிடம் கேட்டார்கள். அது அம்மாவுக்கு புரியாததால், டேட் தானே சார் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன் பிறகு தான், அது இல்ல மேடம், மேனேஜர் கூட, தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள் அதன் பிறகு தான். எங்க குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி இனிமேல் படங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம் என்றார். அதன்பின் தான் விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகும் வாய்ப்பு கிடைத்தது என்று நடிகை கல்யாணி பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசினார்.


Click it and Unblock the Notifications











