ரஜினிகாந்த்துடன் திருமணம் முடிந்ததா?.. நடிகை சொன்ன விஷயத்தை பாருங்க.. இது வேற நடந்ததா?
சென்னை: இந்திய அளவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். 170 படங்களில் நடித்து முடித்திருக்கும் அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் ரஜினிகாந்த்தின் நடிப்பும் சூப்பர் வரவேற்பை பெற்றது. வேட்டையனுக்கு முன்பு வெளியான ஜெயிலர் படமும் வெற்றி பெற்றதால் ரஜினியும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. ரஜினியை வைத்து இப்படி ஒரு சமூக அக்கறையுடைய படத்தை கொடுத்த ஞானவேலுவையும், அதில் நடித்த ரஜினியையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்று பொதுவான ரசிகர்கள் கூறினார்கள். மேலும் ரஜினிக்கு தேவையான மாஸ் மொமண்ட்ஸையும் இயக்குநர் சிறப்பாக கையாண்டிருப்பதாக ரஜினி ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

கூலி ரஜினிகாந்த்: வேட்டையன் படத்துக்கு பிறகு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியிருக்கிறது. இப்போதைய இயக்குநர்களில் லோகேஷ்தான் நம்பர் ஒன்னில் இருக்கிறார். எனவே இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து அந்த இடத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் லோகேஷ் முழு முனைப்புடன் இருக்கிறார்.
கவிதா பேட்டி: மேலும் ரஜினியும் இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இந்நிலையில் ரஜினி குறித்து அவருடன் இணைந்து நடித்த கவிதா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒருமுறை மோகன்பாபுவுடன் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது மேக்கப் மேன் பத்திரிகை ஒன்றை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். அந்த பத்திரிகையில் நானும், ரஜினியும் திருமணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தார்கள்.
இங்கே ஏன் இருக்க?: அந்த செய்தியை குறிப்பிட்ட என்னுடைய மேக்கப் மேன் நீ ஏன் இன்னும் இங்கு உட்கார்ந்திருக்க. உனக்குதான் ரஜினியுடன் திருமணம் முடிந்துவிட்டதே. நீ அங்கு இருப்பதுதானே சரி என்று சொன்னார். அது பொய்யான செய்தி என்பது எனக்கு தெரியும். எனவே அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது அங்கிருந்த மோகன் பாபு அந்த மேக்கப் மேனை அழைத்து எனக்கும், ரஜினிக்கும் திருமணம் என்ற செய்தியை வாசித்து காட்ட சொன்னார்.
பேக்கப் சொன்ன மோகன்: மேக்கப் மேனும் வாசித்து காண்பித்தார். அதனை கேட்ட மோகன் பாபு உச்சக்கட்ட டென்ஷனாகி ஷூட்டிங்கிற்கு பேக்கப் சொல்ல இயக்குநரிடம் கூறினார். பேக்கப் ஆன பிறகு அந்த இயக்குநரை அழைத்துக்கொண்டு என்னைப் பற்றி எழுதியிருந்த பத்திரிகையின் அலுவலகத்துக்கு சென்று கத்திவிட்டார். உடனே அவர்கள் மறுப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். நான் ரஜினியுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதனால்தான் அப்படி எழுதினார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் ரஜினி மட்டுமின்றி அப்போது முன்னணி ஹீரோக்களுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றேன். இருப்பினும் ரஜினியுடன் மட்டும் ஏன் அப்படி என்னை இணைத்து பேசினார்கள் என்று தெரியவில்லை” என்றார்


Click it and Unblock the Notifications











