Vijay Wife: சங்கீதா குறித்து பிரபல நடிகையிடம் பேசிய விஜய்.. இப்படியெல்லாம் சொல்லி இருக்காரே!
சென்னை: 90களின் இறுதி மற்றும் 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தபோது கௌசல்யா என்ற பெயரிலேயே நடித்த இவர், மலையாளத்தில் காலடி வைக்கும் போது தனது பெயரை நந்தினி என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் விஜய் அவரது மனைவி சங்கீதா குறித்து தன்னிடம் பகிர்ந்து கொண்டதை பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது தமிழ் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் விஜய்யுடன் நல்ல நட்பை வைத்திருந்த கௌசல்யா, அவருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை முன்பு இந்தியா கிளிட்ஸுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். ஒன்றாக நடித்தபோது நடிகர் விஜய் தன்னுடன் நன்றாகப் பழகியதாகவும், நிறைய விஷயங்கள் பேசுவார் என்றும் நடிகை தெரிவித்தார். மேலும், விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பற்றி முதலில் சொன்ன சில நண்பர்களில் தானும் ஒருவன் என்றும் கௌசல்யா கூறினார்.
கௌசல்யா மேலும் கூறுகையில், “விஜய் உண்மையிலேயே ஒரு இனிமையான இதயம் கொண்டவர். விஜய் என்ற தனிநபரின் குணங்களுக்காக அவருக்கு நிச்சயமாக புகழ் கிடைக்க வேண்டும். அவர் மிகவும் பணிவானவர். சங்கீதாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக விஜய் என்னிடம் முன்பே தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தை முதலில் என்னிடம் சொன்னது அவர்தான் என்று நினைக்கிறேன். நாங்கள் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்றபோது விஜய் இதை என்னுடன் பகிர்ந்து கொண்டார்," என்றார்.

சங்கீதா: மேலும் கூறுகையில், “நாங்கள் ஒரு படப்பிடிப்புக்காக பயணத்தில் இருந்தோம். அப்போது அந்த விமானத்தில் வைத்து விஜய் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினார். "நான் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், அவர் லண்டனில் உள்ளார்," என்று அவர் கூறினார். இந்த விஷயம் முதலில் திரையுலகில் அறிந்தவர்களில் நானும் ஒருவராக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தப் பயணம் முடிந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர்களின் திருமணம் நடந்தது,” என்றார்.
விஜய் அதுக்கு தகுதியானவர்: தொடர்ந்து அந்த பேட்டியில், “இன்று அவருக்கு கிடைக்கும் புகழும், ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் விஜய்க்கு நூறு சதவீதம் தகுதியானது. அவர் மிகவும் பணிவானவர். விஜய் மிகவும் நல்ல மனிதர், அவருடன் வேலை செய்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது,” என்றார். விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த முதல் படமான நேருக்கு நேரில், கௌசல்யா விஜய்யின் ஜோடியாக நடித்தார். பின்னர், பிரியமுடன், திருமலை போன்ற படங்களில் விஜய்யுடன் அவர் நடித்தார்.

த்ரிஷா: இருப்பினும், விஜய்யின் வாழ்க்கையில் இன்று என்ன நடக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பிரபல நடிகருக்கும் சங்கீதாவுக்கும் இடையிலான திருமணம் கோவிட் காலம் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் அவர்கள் தரப்பில் கூறப்படவில்லை. அதே நேரத்தில், நடிகை த்ரிஷாவுடன் விஜய்க்கு இருக்கும் பழக்கமே, சங்கீதா - விஜய் இடையேயான சர்ச்சைகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. விஜய்யும் த்ரிஷாவும் இதனை மறுக்காமல் இருப்பதே சர்ச்சை மேலும் காட்டுத்தீ போல பரவ காரணம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











