விஜயகாந்த் எனக்கு ரொம்ப க்ளோஸ்.. அவரு வீட்டு பெட்ரூமில் இருந்து பார்ப்பாரு.. குஷ்பு ஷேரிங்க்ஸ்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவர் வாழ்ந்த நாட்களில் தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் என அவர் செய்த உதவிகள் என்பது திரையுலகிலும் சரி அரசியல் தளத்திலும் சரி யாரும் செய்யாதது என்றே கூறலாம். இப்படியான நிலையில் கேப்டன் உடனான நினைவுகளை நடிகை குஷ்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜயகாந்த், எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என கேப்டன் எந்த இடத்திற்கு உயர்ந்து சென்றாலும், எப்போதும் எளிய மக்களில் ஒருவனாக இருந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னை காரணமாக, அரசியலில் முழு மூச்சாக ஒரு கட்டத்திற்கு மேல் செயல்பட முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் திரைத்துறையில் அவர் இருந்தபோதும் சர், அரசியல் தளத்திற்கு வந்த போதும் சரி, தன்னிடம் இருக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தினார்.

தனது கட்சியின் முதல் மாநாட்டினை நடத்திய பின்னர் கூட, தனது கட்சி தொண்டர்களிடம், 'சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருக்கேன், எல்லாரும் சாப்பிட்டு பத்திரமா வீடு போய்ச் சேரனும் எனக் கூறியவர். விஜயகாந்த் அலுவலகத்திற்கு போனால், வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற நம்பிக்கையை தலைநகர் சென்னையில் ஏற்படுத்தியவர் கேப்டன். தான் நடிக்கும் படத்தில் பணியாற்றும் அனைவரும் நன்றாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை கொடுத்து அனைவருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு போடச் சொன்னார் கேப்டன்.
சாப்பாடு: அவருக்கு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடங்கி, அதே படத்தில் வேலை செய்யும் லைட் மேன் வரை அனைவரும் சமம் தான். தன்னை நம்பி வந்தவர்களை பசியோடு அனுப்பக் கூடாது என, ஓடும் ரயிலை நிறுத்தி சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து அனைவரது பசியையும் ஆற்றியவர். அவரை கிண்டல் கேலி செய்பவர்கள் இருந்தாலும், அவர் மீது இதுதான் குற்றச்சாட்டு என ஒரு விஷயத்தை சுட்டிக் காட்ட முடியாது.

குஷ்பு: இப்படியான நிலையில் நடிகை குஷ்பு கேப்டன் உடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, கேப்டன் எனக்கு எப்போது, ஸ்பெஷல் மற்றும் ரொம்பவும் க்ளோஸ். படப்பிடிப்புத் தளத்தில் பார்த்ததுமே அவர் கேட்கும் முதல் கேள்வி, சாப்பிட்டியா என்பதுதான். எனது வீடும் அவரது வீடும் எதிரெதிரே தான் இருந்தது. அவரது வீட்டு பெட்ரூம் மற்றும் டெரஸில் இருந்து பார்த்தால் எனது வீட்டு சமையல் அறை நன்றாகத் தெரியும்.

கேப்டன்: நான் சமையலறையில் சமைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தால் உடனே போன் செய்து, என்னடி சமச்சுட்டு இருக்க எனக் கேட்பார். நான் சப்பாத்தி எனக் கூறுவேன். சரி சிக்கனா? இல்லை மட்டனா? எனக் கேட்பார். நான் உடனே சிக்கன் எனக் கூறுவேன். சரி இங்க கொடுத்துவிடு எனக் கூறிவிட்டு போனை வைத்துவிடுவார். அவரைப் போன்ற மனிதரைப் பார்ப்பதெல்லாம் மிகவும் கடினம்" என கேப்டன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.



Click it and Unblock the Notifications











