ஒரே நேரத்தில் பல நடிகைகள்.. ஏமாந்த அந்த நடிகை?.. எப்படி சமாளிச்சாரோ - வெளியானது கமல் ஹாசன் சீக்ரெட்
சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) நடிகர் கமல் ஹாசன் ஒரே நேரத்தில் பல நடிகைகளை எப்படி சமாளித்தாரோ என நடிகை குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.
சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக நடிப்பில் சிறந்தவர் என புகழப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள்.

இயக்கத்திலும் புதுமை: கெட்டப்புகளை மாற்றுவது, ஹீரோ என்ற இமேஜை உடைத்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது என கமல் நடிப்பில் மட்டும் புதுமை செய்யவில்லை. அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. அதேபோல் அவர் கதை எழுதிய அன்பே சிவம் படமும் இன்றுவரை க்ளாஸிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் மட்டும் கில்லி இல்லை: கமல் ஹாசன் நடிப்பு, இயக்கம் என சினிமாவில் மட்டும் தனித்து தெரிபவர் இல்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதுமே தனித்துவமாக இருப்பவர். தீவிர கடவுள் மறுப்பாளரான அவர் மிகத்தீவிரமான வாசிப்பாளரும்கூட. அதேபோல் தனது கருத்தையும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக கூறுவார்.
அதுமட்டுமின்றி பல நடிகைகளை காதலித்ததாக கூறப்படும் கமல் ஹாசன், சரிகா, வாணி கணபதி என இருவரை திருமணம் செய்துகொண்டார். கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பிறகு பிரிந்தார். அவரது இந்த வாழ்க்கை பலரிடம் விமர்சனத்தை பெற்றாலும் அதை பற்றி கண்டுகொள்ளாதவர் கமல் ஹாசன்.
சீக்ரெட் சொன்ன குட்டி பத்மினி?: இந்நிலையில் கமல் ஹாசனின் காதல் வாழ்க்கை குறித்து நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது கமல் ஹாசன் மொத்தம் ஆறு நடிகைகளை ஒரே நேரத்தில் காதலித்தார் என கூறியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய குட்டி பத்மினி, " நடிகை ஸ்ரீவித்யா கமலை மிகவும் நேசித்தார். கமலுடன் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கமல் மீது காதல் ஏற்பட்டது.
காதல் விட்டுவிட சொன்னேன்: கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு அப்போது அவர் அழகாக இருப்பார். நான் கமலுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அப்போது நடிகை வாணி கணபதியை கமல் காதலித்துவந்தார். விமான நிலையத்தில் வாணிக்கு கமல் கிஃப்ட் வாங்குவதை பார்த்திருக்கிறேன். அதேபோல், அவர் ஹிந்தி நடிகை ரேகாவையும் காதலித்து வந்ததாக சிலர் கூறினர். எனவே, கமல் மீது வைத்துள்ள காதலை விட்டுவிடுங்கள் என ஸ்ரீவித்யாவிடம் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை.

ஆறு நடிகைகளுடன் காதல்: கமல் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகளை காதலித்தார். ஸ்ரீவித்யா, ஹிந்தி நடிகை ரேகா, ஜெயசுதா, வாணி கணபதி இவர்கள் இல்லாமல் இன்னும் 2 நடிகைகள் இருந்தனர். அத்தனை நடிகைகளையும் கமல் எப்படி சமாளித்தார் என தெரியவில்லை. அதனால்தான் அவருக்கு சகலகலா வல்லவன் என பெயர் வந்தததோ என்னவோ. வாணி கணபதியை கமல் திருமணம் செய்துகொண்டது ஸ்ரீவித்யாவை மிகவும் பாதித்தது.
அதிலிருந்து மீளவே அவருக்கு சில வருடங்கள் ஆனது. அதன்பின் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரையும் பிரிந்தார். அதன்பின் சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் யாரையும் பார்க்க விரும்பாத ஸ்ரீவித்யா கமலை மட்டுமே சந்திக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்தார்" என்றார்.,


Click it and Unblock the Notifications











