Bala - பாலாவின் செயலால் ஹோட்டல் ரூமில் அழுத லைலா.. பிறகு காலில் விழுந்த சம்பவம்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Bala (பாலா) பாலா செய்த செயல் ஒன்றால் நடிகை லைலா ஹோட்டல் ரூமில் அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலா. முதல் படத்தை காதல் கதையாக எடுத்தாலும் அதை அவர் உருவாக்கிய விதம் புதுமையாக இருந்ததால் படம் மெகா ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதில் பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

இளம் ஹீரோக்களை உருவாக்கிய பாலா: தொடர்ந்து அவர் இயக்கத்தில் நான் கடவுள் படம் உருவானது. அந்தப் படத்தில் முதலில் அஜித் நடிக்க வேண்டியிருந்தது. சில பிரச்னைகளால் அஜித் வெளியேற ஆர்யா உள்ளே வந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. ஆனால் அந்த படங்களில் நடித்த ஹீரோக்கள் இன்று நல்ல நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பாலாவை சுற்றி பிரச்னைகள்: சூழல் இப்படி இருக்க விக்ரம் மகன் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அவரது உருவாக்கம் திருப்தி தராததால் அந்தப் படம் பரணில் வைக்கப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாக கருதப்பட்டது. அந்தப் பிரச்னை ஓய்வதற்குள் பாலாவும் அவரது மனைவி மலரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வணங்கானிலும் பிரச்னை: தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்துவந்த பாலாவுக்கு ஆசுவாசம் கிடைக்கும் விதமாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். இதனையடுத்து அந்தப் படத்தை அருண் விஜய்யை வைத்து இப்போது இயக்கிவருகிறார் பாலா.
முக்கியத்துவம் வாய்ந்த நந்தா: ஒரு இயக்குநருக்கு முதல் படம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நந்தா. அப்படித்தான் பாலாவுக்கும் நந்தா படம் அமைந்தது. அந்தப் படம் பாலாவுக்கு மட்டுமின்றி சூர்யாவின் கரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படம். அதில் சூர்யாவுடன் ராஜ்கிரண், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
அழுத லைலா: அதாவது ஈழத்திலிருந்து வரும் அகதிகளை பற்றி நந்தா படத்தில் பேசியிருப்பார் பாலா. ஈழத்து பெண்ணாக லைலா நடித்திருப்பார். ஆனால் லைலாவுக்கோ முதலில் ஈழ தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையாம். மேலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டாராம். எப்போதும் தனக்கு வேண்டியதை நடிகர், நடிகைகளிடமிருந்து வாங்காமல் விடமாட்டார் பாலா.
அதன் காரணமாக பல சமயங்களில் டென்ஷனும் ஆகிவிடுவார். அப்படி லைலாவிடமும் கடுமையான கோபத்தை காட்டியிருக்கிறார். இதனை பார்த்து மிரண்டு போன லைலா இனி என்னால் நடிக்க முடியாது என கூறி ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து அழுதிருக்கிறார்.
காலில் விழுந்த லைலா: ஆனால் அவருடன் இருந்தவர்கள், 'பாலா மிகச்சிறந்த இயக்குநர். அவரது படத்தில் நடித்தால் கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும் என சொல்லியிருக்கின்றனர். லைலாவும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். பிறகு படம் மொத்தமாக தயாரான பிறகு லைலா பார்த்திருக்கிறார். பார்த்தவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம். நாமா இப்படி நடித்திருக்கிறோம் என ரொம்பவே ஆச்சரியப்பட்டாராம்.
உடனே அருகில் இருந்த பாலாவின் கால்களில் விழுந்த லைலா, 'என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஷூட்டிங்கின்போது நீங்கள் நடந்துகொண்டதை பார்த்து உங்கள் மீது கோபத்தில் இருந்தேன். ஆனால் படம் பார்த்த பிறகுதான் நீங்கல் ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள் என புரிகிறது' என்று சொல்லி அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருக்கிறார். அதன்படிதான் பாலா அடுத்து இயக்கிய பிதாமகன் படத்தில் லைலாவை நடிக்க கமிட் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











