ரஜினிகாந்த்தும் நானும் காதலித்தோமா?.. அந்த சமயத்தில் என்ன நடந்தது?.. பிரபல நடிகை ஓபன் டாக்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வருடம் தங்களுக்கு செம ட்ரீட் இருப்பதாக ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள். கூலி ஷூட்டிங்கை முடித்த அவர் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் அட்டப்பாடியில் மும்முரமாக நடந்துவருகிறது. இப்படத்தின் மீதும் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணிரத்னம் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். மேலும் ஆசிய கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் அவர் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் என்று பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி படம் சம்பாதிக்கும் லாபத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு அவருக்கு செல்வதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. சாதாரண கண்டக்டராக இருந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் அவர் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகவும், ரோல் மாடலாகவும் இருக்கிறார். சாமானியர்கள் மட்டுமின்றி திரையுலகில் அவருடன் போட்டிப்போடும் நடிகர்கள்கூட அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Latha has spoken openly about the gossip surrounding her relationship with Rajinikanth

இயல்பான குணம் படைத்த ரஜினிகாந்த்: பொதுவாக ஒருவர் பெரிய உயரத்துக்கு சென்றுவிட்டால் தான் வந்த பாதையை பெரும்பாலும் மறந்துவிடுவார்கள். மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கவே பார்ப்பார்கள். ஆனால் ரஜினியோ அதற்கு நேர் மாறாக இருப்பவர். படு சிம்ப்பிளாக இன்னமும் தான் ஒரு சாதாரணமானவன் என்பதை தனது தலையில் வைத்துக்கொண்டு; தன்னுடைய புகழையோ, செல்வாக்கையோ, தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையோ தன்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் இத்தனை வருடங்களாகியும் சூப்பர் ஸ்டார் நாற்காலியை அவரிடமிருந்து யாராலும் பறிக்க முடியவில்லை என்பது அவரது ரசிகர்களின் கருத்து.

விமர்சனங்களை சந்திக்கும் ரஜினிகாந்த்: அவர் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்தவர். அதிலும் அரசியல் விவகாரத்தில் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டார் அவர். அவர் அரசியலுக்கு வருவார் என்று 90களிலிருந்து அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சரியான பதில் எதுவும் கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்தார். திடீரென கடந்த 2017ஆம் ஆண்டு அவர் தான் அரசியலுக்கு வருவேன் என்றும்; தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாகத்தான் இருக்கும் என்றும் அறிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்தார்கள் ரசிகர்கள். ஆனால் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் என்ட்ரியிலிருந்து ஜகா வாங்கினார்.

Actress Latha has spoken openly about the gossip surrounding her relationship with Rajinikanth

அதேபோல் அவர் வலதுசாரி சிந்தனையுடையவர் என்றும் ஒரு விமர்சனம் உண்டு. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, 'எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் நாடு சுடுகாடாகிவிடும்' என்று கூறியதெல்லாம் மிகப்பெரிய கண்டனங்களை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் தன்னுடைய ரசிகர்களை அவர் கண்டுகொள்வதே இல்லை; பிறந்தநாளின்போதாவது தன்னுடைய ராகவேந்திரா மண்டபத்துக்கு குறிப்பிட்ட அளவு ரசிகர்களை அழைத்து ஒருவேளை சாப்பாடாவது போடலாம்; அதையும் செய்வதில்லை என்கிற விமர்சனமும் காலங்காலமாக அவரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இருப்பினும் தன்னைப் பற்றி வரும் விமர்சனத்துக்கெல்லாம் அவர் பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளமாட்டார்.

ரஜினிக்கு மன உளைச்சல்?: இதற்கிடையே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை தாங்கள் பிரிவதாக அவர்கள் அறிவித்தார்கள். அதனையடுத்து இரண்டு பேரையும் எப்படியாவது சேர்த்து வைத்திட வேண்டும் என்று ரஜினிகாந்த்தும் எவ்வளவோ முயற்சிகளை செய்தார். ஆனால் இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அந்த விஷயம் ரஜினிக்கு தீவிர மன உளைச்சலை கொடுத்திருப்பதாகவும், ரொம்பவே தைரியமான ரஜினியை இதுவரை அப்படி பார்த்ததே இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Actress Latha has spoken openly about the gossip surrounding her relationship with Rajinikanth

ரஜினியின் மகா தைரியம்: ரஜினிகாந்த் இப்போது வேண்டுமானாலும் பொறுமையாக இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்துவந்த காலத்தில் மிகப்பெரிய கோபக்காரராக இருந்தவர். பெங்களூருவில் பெரிய ரவுடியை ஓட ஓட அடித்த அவர்; திரைத்துறைக்கு வந்த பிறகும் தனது முரட்டு குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் சென்னை விமான நிலையத்தில் குடி போதையில் அவர் தகராறு செய்ததாகவும்; அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் அந்தக் காலத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் மிகவும் தைரியமாக எதிர்த்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

பெண்கள் விஷயத்தில் ரஜினிகாந்த்: ரஜினி மீது விமர்சனங்கள் மற்ற விஷயங்களில் வைக்கப்பட்டாலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பாலும் அவரது பெயர் பெரிதாக கிசுகிசுக்களில் அடிபட்டது கிடையாது. முக்கியமாக அவருடன் பணியாற்றிய நடிகைகள்கூட ரஜினியை பற்றி பெருமையாகத்தான் சொல்வார்கள். இருப்பினும் ரஜினியை பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்துகொண்டுதான் இருந்தன. அந்த கிசுகிசுக்களில் முக்கியமான ஒன்று நடிகை லதாவுடன் இணைக்கப்பட்ட கிசுகிசு. ரஜினிக்கும், லதாவுக்கும் காதல் இருந்ததாகவும்; அதனை பிடிக்காத மறைந்த எம்ஜிஆர், தன்னுடைய ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்ததாகவும்; அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

Actress Latha has spoken openly about the gossip surrounding her relationship with Rajinikanth

லதாவின் பேட்டி: இந்நிலையில் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை லதா பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "ரஜினிகாந்த் ரொம்பவே நல்லவர். அவர் எனக்கு நல்ல நண்பர். அந்த சமயத்தில் ரஜினிகாந்த் வளர்ந்துவரும் நடிகர். நான் அப்போதே பிரபலமாக இருந்தேன். அதிலும் எம்ஜிஆர் ஹீரோயின் என்றும் பெயர் எடுத்திருந்தேன். நான், ரஜினிகாந்த், மஞ்சுளா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தின் ஷூட்டிங் ஆழியார் அணைக்கட்டில்தான் நடந்தது. அப்போதே விஜயகுமாரும், மஞ்சுளாவும் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ரஜினியும் அப்போது எங்களுடன் பழகினார். மாலை வந்தால் எங்களுடன் வந்து அமர்ந்து பேசுவார். கோயிலுக்கு ஒன்றாக போவோம்.

அதில் எந்த உண்மையும் இல்லை: மற்றபடி என்னையும் ரஜினியையும் இணைத்து வைத்து ஏகப்பட்ட கதைகளை சொல்வார்கள். ஆனால் அதிலெல்லாம் துளியளவும் உண்மையில்லை. இன்றுவரை நான் அவரை மதித்துக்கொண்டிருக்கிறேன். அவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த மனிதர். இப்போது அவர் உலகளவில் புகழடைந்திருக்கிறார். ஆனால் அது எதையுமே அவர் தன்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ளவே இல்லை. அப்போது எப்படி பழகினாரோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் எனக்கு ரஜினிகாந்த்தை மிகவும் பிடிக்கும்" என்றார். இதன் மூலம் ரஜினிக்கும் தனக்கும் காதல் ரீதியாக எந்தப் பழக்கமும் இருந்ததில்லை என்பதை லதா உறுதி செய்துவிட்டதாக ரஜினியின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X