MGR - உனக்கு என்ன வேண்டும் சொல்லு.. லதாவிடம் எம்ஜிஆர் பேசிய கடைசி விஷயம் தெரியுமா?
சென்னை: புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். நடிகராக மட்டுமின்றி அதிமுக கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இந்த சூழலில் எம்ஜிஆருடன் பல படங்களில் இணைந்து நடித்த லதா; எம்ஜிஆர் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டில் யாராலும் மறக்கமுடியாத பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இலங்கையின் கண்டியில் பிறந்த அவர் அடிப்படையில் கேரளத்துக்காரர். சில காரணங்களால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எம்ஜிஆருக்கு கலை மீது ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி பாய்ஸ் கம்பெனி என்ற நாடக குழுவில் இணைந்தார். ஆரம்பத்தில் அவர் பெண் வேடம் ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, காலம் செல்ல செல்ல முக்கியமான ரோல்கள் கிடைத்தன.

சினிமா எண்ட்ரி: நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து தொடர்ந்து சினிமா சான்ஸ்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி, இரு சகோதரர்கள், வீர ஜெகதீஸ், மாயா மச்சிந்திரா உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தார். இருந்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் பெரிதாக கிடைக்கவில்லை.
திராவிட இயக்கங்களுடன் பழக்கம்: சூழல் இப்படி இருக்க திராவிட இயக்க தலைவர்களுடன் எம்ஜிஆருக்கு பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறியது. குறிப்பாக கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது எம்ஜிஆருக்கு. இதற்கிடையே எம்ஜிஆரும் ஃபேமஸான நடிகராக மாறிவிட்டார். மந்திரிகுமாரி, ராஜகுமாரி, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம், ராஜராஜன், மன்னாதிமன்னன் என பல படங்கள் ஹிட்டடித்தன. தமிழ்நாடு முழுவதுமே எம்ஜிஆரின் செல்வாக்கு அதிகரித்தது.
ரூல் செய்த எம்ஜிஆர்: எம்ஜிஆர் தனியாக கட்சியை ஆரம்பித்த பிறகு 1977ஆம் ஆண்டு தேர்தலில் வென்று எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இடையில் 1980ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் நடந்த தேர்தலில் அவரே வென்று முதலமைச்சர் ஆனார். அந்தக் காலத்தில் கருணாநிதிக்கு அரசியலில் வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும். சூழல் இப்படி இருக்க உடல்நலக்குறைவால் 1987ஆம் ஆண்டு உயிரிழந்தார் எம்ஜிஆர்.
லதா பேட்டி: இந்நிலையில் எம்ஜிஆருடன் படங்களில் இணைந்து நடித்த லதா அவர் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எம்ஜிஆர் இறக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு அவரை அவருடைய ராமாவர தோட்டத்து வீட்டில் போய் பார்த்தேன். படுக்கையில் இருந்த அவர் சிரமப்பட்டே எழுந்தார். எழுந்து அமர்ந்ததும் என்னிடம் அவர், 'ஏசி கார்லதானே வந்த. உனக்கு ஏன் இப்படி வேர்க்குது. ஏசி இல்லாம நீ இருக்கமாட்டியே.. ஏசி போட சொல்லவா? என கேட்டார். அதுமட்டுமின்றி உனக்கு ஏதாவது வேண்டுமா? எதுவாக இருந்தாலும் என்னிடம் கேள் என்றார். அதுதான் நான் எம்ஜிஆரை கடைசியாக பார்த்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











