Lissy :விக்ரம் படத்துல நதியாவை ரிஜெக்ட் பண்ணிட்டு எனக்கு சான்ஸ் கொடுத்தாரு.. லிசி பளிச்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 1986ம் ஆண்டில் கமல்ஹாசன், லிசி, டிம்பிள் கபாடியா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்தது.

இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியிருந்த நிலையில், சுஜாதாவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதியிருந்த கமல்ஹாசன் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

Actress Lissy shared how she got acting chance in Vikram movie

விக்ரம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து மனம்திறந்த லிசி :

நடிகர் கமல்ஹாசன், டிம்பிள் கபாடியா, லிசி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டில் வெளியான படம் விக்ரம். இந்தப் படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுஜாதா இணைந்து செய்திருந்த நிலையில், படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். சத்யராஜ், அம்பிகா, அம்ஜத்கான், சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் பங்கு அதிகமாக இருந்ததாக கமல் பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையும் விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், வாலி, வைரமுத்து உள்ளிட்டவர்கள் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். இந்தப் படத்தின் விக்ரம் பாடலை கமலே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Actress Lissy shared how she got acting chance in Vikram movie

இந்தப் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான டிம்பிள் மற்றும் லிசி இருவரும் சிறப்பான மற்றும் கவர்ச்சியான நடிப்பை போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்திருந்தனர். இந்தப் படம் கமர்ஷியலாக மிகச்சிறந்த வெற்றியை பெற்றது. இந்தப் படம் குறித்து தற்போது நடிகை லிசி தன்னுடைய மனம்திறந்த பேட்டியை அளித்துள்ளார். தான் நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரது புகைப்படங்களை போஸ்டர்களை தன்னுடைய பள்ளி ஹாஸ்டல் முழுவதும் ஒட்டி வைத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Actress Lissy shared how she got acting chance in Vikram movie

கமலின் படங்களை எல்லாம் கிளாஸ் கட் செய்து பார்ப்பேன் என்றும் லிசி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். கமலின் வாழ்வே மாயம் படம் மலையாளத்தில் வெளியான நிலையில், தான் பள்ளியை கட் செய்துவிட்டு அந்தப் படத்தை போய் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். 10வது படிக்கும்போது இந்த வேலையை தான் பார்த்ததாகவும் ஆனால் தான் சிறந்த படிப்பாளி என்பதால் தன்னை கண்டுபிடித்தபோது பள்ளி நிர்வாகம் விட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விக்ரம் படத்தில் ஒரிஜினலாக அந்த கேரக்டரில் நதியாதான் நடிக்க தேர்வாகியிருந்ததாகவும் தானும் நதியாவும் மலையாளத்தில் இணைந்து ஆடிய ஒரு பாட்டை பார்த்துவிட்டு, இந்த சான்சை தனக்கு கமல் கொடுத்ததாகவும் லிசி தெரிவித்துள்ளார். தான் முதலில் கமலை பார்த்தபோது, கனவுலகத்தில் இருப்பது போல உணர்ந்ததாகவும், அவர் டேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியபோதும், எதுவும் தனக்கு காதில் விழவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X