பாலுமகேந்திரா இன்னொரு பெண்ணின் கணவர்.. பங்கு போட்டது தப்புதான்.. எமோஷனலாக மனம் திறந்த நடிகை
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருந்தாரோ அதேபோல் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் இருந்தன. முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்த அவர்; அடுத்ததாக நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். மேலும் நடிகை மௌனிகாவுடனும் லிவிங் டூ கெதரில் இருந்தார். இந்நிலையில் மௌனிகா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர்களில் ஒருவர் பாலுமகேந்திரா. ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர்; இந்தியாவுக்கு வந்து புனே சினிமா கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான படிப்பை படித்தார். அதனையடுத்து சினிமாவில் ஒளிப்பதிவாளராக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தலைசிறந்த கேமரா மேனாக திகழ்ந்தார். அவரது ஒளிப்பதிவில் நடித்தால் கண்டிப்பாக அழகாக இருப்போம் என்று நடிகர்களும், நடிகைகளும் நினைக்கும் அளவுக்கு பாலுவின் கேமரா கோலிவுட்டில் பெரிய மாயஜாலத்தை நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கான டிமாண்ட் சினிமாவில் சரசரவென்று உயர தொடங்கியது.
பாடலில் கெத்து காண்பித்த பாலுமகேந்திரா: முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலில் பாலுமகேந்திராவின் கேமரா அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். அதேபோல் பல படங்களில் பாலுமகேந்திராவின் கேமரா அந்தப் படங்களை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கின்றன. அவரது கேமரா கண்கள் மட்டும்தான் சாதாரண அழகியையும் பேரழகியாக காட்டும் என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் சொல்வதுண்டு.உதாரணமாக ஏற்கனவே பேரழகியாக இருந்த சில்க் ஸ்மிதாவை மூன்றாம் பிறை படத்தில் பாலுமகேந்திரா அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். அதனைப் பார்த்த பலரும் மேற்கொண்டு சில்க்கை அதிகம் ரசிக்க ஆரம்பித்தார்கள்.

இயக்குநர் அவதாரம்: ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திராவுக்குள் அடிப்படையில் ஒரு இயக்குநரும் இருந்தார். முதலில் கேமரா மேனாக தன்னை நிரூபித்த அவர் பிறகு இயக்குநர் அவதாரத்தை எடுத்தார். அப்படி கன்னடத்தில் கோகிலா படத்தை இயக்கிய அவர் தமிழில், அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என தொடர்ந்து இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவரது ஒளிப்பதிவில் நடிப்பதற்கு எப்படி நடிகர்கள் ஆசைப்பட்டார்களோ அதேபோல் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கும் ஆசைப்பட்டார்கள். அதுமட்டுமின்றி பல ஆளுமைகள் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது.
இந்தியா முழுவதும் பிரபலம்: அவர் எப்படி இந்திய அளவில் ஃபேமஸாக இருந்தாரோ அதேபோல் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்களான பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன் உள்ளிட்டோரும் தங்களது படைப்புக்கள் மூலம் தனித்த கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள் என்பதும், வரிசையாக இரண்டு முறை தேசிய விருது வென்ற மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலுவை சுற்றிய சர்ச்சைகள்: பாலுமகேந்திரா சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சத்திலும் இருந்தவர். முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஷங்கி என்ற மகனும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க பிரபல நடிகை ஷோபாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் அப்போதைக்கு பெரிய பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் பாலுமகேந்திராவைவிடவும் ஷோபா பல வருடங்கள் வயதில் இளையவர் என்பதால் அந்த சர்ச்சைகள் வெடித்தன. அவரைத் தொடர்ந்து நடிகை மௌனிகாவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் பாலு இருந்ததும் விமர்சனங்கள் எழ வழிவகுத்தன.
ஷோபா மரணம்; பாலு மீது சந்தேகம்: இதற்கிடையே பீக்கில் இருந்தபோதே பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன ஷோபா திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு இயக்குநர்தான் காரணம்; மன ரீதியாக ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார் என்றெல்லாம் இப்பொதுவரைக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்கள் இரண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும். இந்நிலையில் பிரபல நடிகையான மௌனிகா பாலுமகேந்திரா குறித்து மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மௌனிகாவின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இன்னொரு பெண்ணின் கணவரை பங்குபோட்டு நான் வாழ்ந்தது தவறுதான். ஆனால் அந்தத் தவறான வாழ்க்கையை நான் சரியாக வாழ்ந்தேன். அவருக்கு கொடுக்கக்கூடிய அத்தனை மரியாதையை நானும், எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவரும் கொடுத்துக்கொண்டோம். என்னை ரொம்பவே கௌரவமாக நடத்தினார். வாழ வைத்தார்.அவருடைய இடத்தில் வேறு யாரையும் பொருத்தி என்னால் பார்க்க முடியவில்லை. நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கையில் திருமணம் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அதை தாண்டி நிறையவே இருக்கிறது.
கடித்து தின்றுவிட மாட்டேன்: பாலுமகேந்திராவின் மகன் ஷங்கிக்கும் எனக்கு 5,6 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ஷங்கிக்கு வாங்கிக்கொடுத்திருந்த டிஷர்ட், பேண்ட்டை கொடுத்து என்னை போட வைத்து ஃபோட்டோ எடுப்பார். அதேபோல் ஷங்கியின் சைக்கிளில் என்னை அமர வைத்தும் புகைப்படம் எடுத்திருக்கிறார். முதன்முறையாக நான் அவரை பார்க்கப்போகும்போது என்னுடைய அம்மாவும் உடனிருந்தார். பிள்ளையாரை எல்லாம் கும்பிட்டுவிட்டு சென்றேன். அவரது அலுவலகத்துக்கு சென்றதும் என்னை புகைப்படம் எடுக்க முடிவு செய்தார். உடனே எனது அம்மாவும் வர எத்தனித்தார். அதற்கு அவரோ, 'நீங்கள் வந்தால் உங்கள் மகள் கூச்சப்படுவார். நீங்கள் இங்கேயே வெயிட் செய்யுங்கள். உங்களது மகளை நான் ஒன்று கடித்து தின்றுவிடமாட்டேன்' என சொன்னார். அதேபோல் மாடர்ன் ட்ரெஸ் எனக்கு செட் ஆகுமா என்று யோசித்த சமயத்தில் அந்த உடையை போட வைத்தும் என்னை ஃபோட்டோ எடுத்தார்.
களி மண்ணாகத்தான் சென்றேன்: அவர் ஒரு மகா கலைஞர். வெறும் களிமண்னை கொடுத்தாலும் சிலையாக்கிடும் சிற்பி அவர். நானும் அவரிடம் களிமண்ணாகத்தான் சென்றேன். அவர்தான் என்னை செதுக்கினார்" என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இந்த வீடியோவை அதிகம் பேர் ஷேர் செய்தும்வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











