22 ஆண்டு திருமண வாழ்க்கை.. கணவரை டாடினு செல்லமா கூப்பிடுவேன்.. ப்ரீத்தா பேட்டி!

சென்னை: நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள் தான் ப்ரீத்தா விஜயகுமார். சூர்யா நடித்த சந்திப்போமா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவர் கணவர் ஹரி குறித்து பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா ப்ரீத்தா 1998 ஆம் ஆண்டு இந்திரகுமார் இயக்கிய சந்திப்போமா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்தில், சூர்யா, ராதிகா, பிரகாஷ் ராஜ், சரத் பாபு, அம்பிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தமிழில் இவர், படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் ப்ரீத்தா நடித்துள்ளார்.

Actress Preetha Vijayakumar throwback interview trending on social media

நடிகை ப்ரீத்தா விஜயகுமார்: தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர், 2002ம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திய ப்ரீத்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் தனது சகோதரி ஸ்ரீ தேவி மற்றும் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

பிஸ்னஸ் உமன்: ப்ரீத்தா சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் பிசினஸ் உமனாக இருக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி என்னும் இடத்தில் ப்ரீத்தா பேலஸ் என்ற மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300 முதல் 500 பேர் பங்கேற்க முடியும். இந்த கல்யாண மண்டபத்தில் மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற சிற்றுண்டி உணவகத்தையும் ப்ரீத்தா நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் வேலை செய்யும் அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், எடிட்டிங், டப்பிங் ஸ்டுடியோ ஒன்றையும் ப்ரீத்தா நடத்தி வருகிறார்.

அவரிடம் எந்த மாற்றமும் இல்லை: இந்நிலையில், நடிகை ப்ரீத்தா தனது கணவர் ஹரி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான், நாங்கள் வாழ்க்கையை தொடங்கினோம். இப்போது வரைக்கும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். முன் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறார். 22 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவரிடம் இதுவரை நான் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. அவரை நான் செல்லமாக டாடி என்று தான் அழைப்பேன் என்றார்.

இணையத்தில் வைரல்: மேலும், நான் சூர்யாவுடன் சந்திப்போமா படத்தில் நடிக்கும் போது எனக்கு வயசு 14 தான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, அப்போ அது ஒரு பேஷனாக இருந்ததால் அதில் நடித்தேன். இப்போது அந்த படத்தை பார்த்தாலும், சிரிப்பாக வருகிறது. அந்த படத்தைத் தான் அடிக்கடி டிவியில் போடுகிறார்கள் என்று ப்ரீத்தா அந்த பேட்டியில் அழகாக பேசி உள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X