அத்தனைக்கும் காரணம் வடிவேலுதான்.. என்ன நடிகை இப்படி ஓபனாகவே சொல்லிட்டாங்களே?

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் கேங்கர்ஸ் என்கிற படத்திலும் நடிக்கிறார் அவர்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

Throwback Stories Vadivelu

செம வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.

வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: ஒருவழியாக பஞ்சாயத்துக்கள் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என வரிசையாக நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் சிங்காரம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகர் பிரேம பிரியா பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

பிரேம பிரியா: அவர் கொடுத்த ஒரு பேட்டியில், "என்னுடைய வளர்ச்சி தடைப்பட்டதற்கு காரணம் வடிவேலுதான்.பல படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டு நடிக்காமல் மீண்டும் வந்திருக்கிறேன். சுறா படத்தின் ஷூட்டிங்கிற்கெல்லாம் சென்றேன். ஆனால் அங்கு போன பிறகு இவருக்கு பதிலாக வேறு ஒருவரை போடுங்கள் என்று வடிவேலு சொல்லிவிட்டார். நான் வடிவேலு மீது குற்றஞ்சாட்டிய பிறகு ஒரு இயக்குநர் என்னை தொடர்புகொண்டு மறுப்பு வீடியோ போடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் அதை செய்யவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X