Vijayakanth - அசால்ட்டாக நினைத்த ராதா.. அப்செட்டாக்கிய கேப்டன் விஜயகாந்த்.. மனுஷன் கலக்கிட்டாராம்

சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. இந்த சூழலில் அவருடன் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் சேர்ந்து நடித்த ராதா விஜயகாந்த் தன்னை செம அப்செட்டாக்கிவிட்டார் என்று பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

Actress Radha Shares Her Experience With Vijayakanth

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.

நடிக்க மறுத்த கதாநாயகிகள்: விஜயகாந்த் வளர்ந்துவந்த நேரத்தில் அவரது நிறத்தையும், தோற்றத்தையும் வைத்து பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு துவளவில்லை கேப்டன். மாறாக திறமையை வளர்த்து வெற்றியை பெற்றால் ஒதுக்கியவர்களும் வருவார்கள் என்ற கோட்பாட்டின்படி இயங்கி; தன்னை ஒதுக்கியவர்களையே மீண்டும் தன்னுடன் நடிக்கும்படி செய்தார்.

உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார்.

உயிரிழப்பு: இந்த சூழலில் கடந்த மாதம் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்த் உடலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராதா ஷேரிங்ஸ்: இந்த சூழலில் விஜயகாந்த் ராதாவை அப்செட்டாக்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீனாட்சி திருவிளையாடல். இதில் விஜயகாந்த் சிவனாக நடித்திருப்பார். அந்தப் படத்தின் ஒரு பாடல் ஷூட்டிங்கின்போது ராதா கடுமையாக ரிகர்சல் செய்தாராம். மேலும் தான் சிறந்த டான்சர் அதனால் இந்த பாடலில் விஜயகாந்த்தை அசால்ட்டாக ஓவர் டேக் செய்துவிடலாம் என்று அலட்சியமாக இருந்தாராம்.

படம் வெளியானதும் தியேட்டரில் படத்தை பார்த்த ராதாவுக்கு பயங்கர அப்செட்டாம். ஏனெனில் இவர் எவ்வளவுதான் நடனம் ஆடியிருந்தாலும் விஜயகாந்த் சிவனாக அந்தப் பாடலில் நின்றது; அவரது மேனரிஸம் என அனைத்துமே எனது நடனத்தை காலி செய்துவிட்டது. அந்தப் பாடலை பார்க்கும்போது, ச்ச இப்படி ஸ்க்ரீன் பிரெசன்ஸில் இருப்பார் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டராக செய்திருக்கலாமே என ராதாவுக்கு தோன்றியதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X