உனக்கு ரெண்டு அப்பாவா? அப்பா யாருனு தெரியுமா? அசிங்கமான கேள்வி..ராதிகாவின் மகள் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா,1990 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரேயான் ஹார்டி என்ற மகள் பிறந்த நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரேயான் - அபிமன்யு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரயான் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தற்போது வரைக்கும் என்னை பற்றி பலரும் பலவிதமான விஷயத்தை பேசி வருகிறார்கள். அதில், முக்கியமான என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றி தான். இப்போது வரைக்கும் பலர் என்னிடம் கேட்பதும், உனக்கு அப்பா யாருனு தெரியுமா? உனக்கு எத்தனை அப்பா என்று கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்வி என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எந்த சோஷியல் மீடியா பக்கம் சென்றாலும் உனக்கு உன் அப்பா யார் என்று தெரியுமா? உன் குழந்தைகளின் அப்பா யார் என்று தெரியுமா என கேட்கிறார்கள். இப்படி அசிங்கமாக கேள்வி கேட்பவர்கள் என் குழந்தைகளை பார்த்து இருக்கிறார்களா? அவர்கள் இருவரும் அப்படிகே என் கணவரை போலவே இருப்பார்கள்.

Radhika sarathkumar Rayane
Photo Credit:

அப்பா யாருனு தெரியுமா?: இந்த கேள்வியால் என்னை அவர்கள் அவமானப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அந்த கேள்வியால் எனக்கு எந்த அவமானமும் இல்லை. ஏன் என்றால், என் அப்பா யார் என்று எனக்கு நன்றாக தெரியும். ஒரு காலத்தில் நடிகையின் மகள் என்று அவமானப்படுத்தினார்கள், உனக்கு அப்பா இல்லையா என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள், என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட போது உனக்கு இரண்டு அப்பாவா என கேட்டு அசிங்கப்படுத்தினார்கள், என் கணவர் சன்ரைஸ் கிரிக்கெட் டீமில் தேர்வாகி விளையாடிய போது மாமியாரால் கிடைத்தது என்று சொல்கிறார்கள். இப்படி ஏதாவது ஒரு விஷயத்திற்கு மக்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒரு காலத்தில் இதைப்பற்றி எல்லாம் கண்டு கொல்லாமல் விட்டு விட்டேன். ஆனால், இப்போது அப்படி இல்லை, உடனே அந்த விஷயத்திற்கு பதில் சொல்லாமல் நேரம் எடுத்து மோசமான கமெண்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறேன் என்று ரயான் அந்த பேட்டியில் மிகவும் போல்டாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X