ஹீரோக்களிலேயே விஜய்தான் அப்படி என்னை கேட்டார்.. மனதில் இருந்ததை போட்டுடைத்த ரம்பா
சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். தனது கரியரின் ஆரம்பத்தில் கடுமையான ட்ரோல்களை சந்தித்த விஜய் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார். அரசியல் கட்சியையும் ஆரம்பித்திருக்கும் அவர் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் முதலமைச்சராக வேண்டுமென்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உழைத்துவருகிறார்கள்.
விஜய்க்கு பலதரப்பினர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடனம், கேஷுவலான நடிப்பு, மாஸான ஆக்ஷன் காட்சி என அனைத்துக்கும் ரசிகர்கள். முக்கியமாக ரஜினிகாந்த்துக்கு பிறகு சிறுவர்கள், சிறுமிகளை அசால்ட்டாக தனது பக்கம் இழுத்த நடிகர் என்றால் அது விஜய்தான். தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் அவர் நுழைந்தாலும் காலம் செல்ல செல்ல திறமையின் துணை மட்டுமே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது. இன்று அவரது படங்கள் அசால்ட்டாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலிக்கின்றன.
GOAT: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கோட் திரைப்படம்கூட 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. அதேசமயம் படம் விமர்சன ரீதியாக பலத்த சேதாரத்தை சந்தித்ததையும் மறுக்க முடியாது. படத்தில் எதுவுமே புதிதாக இல்லை ரசிகர்கள் விமர்சித்துவிட்டார்கள். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

கடைசி படமா விஜய்க்கு?: இந்த ஜன நாயகன் திரைப்படம்தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கருதப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் அவர் முழுக்க முழுக்க அரசியலில் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதேசமயம் அடுத்த வருடம் தேர்தல் முடிவுகளை வைத்துதான் தொடர்ந்து படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வேன் என தன்னிடம் விஜய் கூறியதாக ஜன நாயகன் படத்தில் நடித்துவரும் மமிதா பைஜு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈகோ இல்லாத நடிகர்: விஜய் யாரிடமும் ஈகோ பார்க்க மாட்டார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ, அவர் சினிமாவில் இருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகள் என பல விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அந்தவகையில் நடிகை ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
ரம்பா பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் நானும் விஜய்யும் சேர்ந்து நடித்தோம். அப்போது விஜய் கனவு கண்டுகொண்டே இருப்பார். நான் எங்கோ தொங்கிக்கொண்டிருப்பேன்; அவர் எங்கேயோ ஆடிக்கொண்டிருப்பார். எனது திரையுலக வாழ்க்கையிலேயே, ஒரு ஹீரோ என்னிடம், 'நான் லண்டன் செல்கிறேன். உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா சொல்லுங்கள் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று கேட்டவர் விஜய்தான். அவர் ரொம்பவே பணிவானவர், எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்" என்றார்.


Click it and Unblock the Notifications











